'பட்டியலின மக்களில் முதல் பட்டதாரி.' இரட்டைமலை சீனிவாசன் பிறந்த நாளில் முதல்வர் வாழ்த்து.!  - Seithipunal
Seithipunal


ஜூலை 7ஆம் தேதியான இன்று தமிழகம் முழுவதும் இரட்டைமலை சீனிவாசன் பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர். இது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்தை ட்வீட்டர் பதிவின் மூலம் தெரிவித்து இருக்கிறார். 

தமிழக பட்டியல் இன மக்களில் முதல் பட்டதாரியாக இருந்தவர் இரட்டைமலை சீனிவாசன். அயோத்திதாச பண்டிதர், அண்ணல் அம்பேத்கர் மற்றும் காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்களின் உழைப்பை போல ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்தவர்தான் இரட்டைமலை சீனிவாசன். 

இவர் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஆற்றிய பணி ஏராளம். அந்த வகையில் அவரது பிறந்த நாளை நினைவு கூர்ந்து தமிழக மக்கள் வாழ்த்துக் கூறி வருகின்றனர். 

பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வரும் நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இதுகுறித்து ,"தமிழகப் பட்டியலின மக்களில் முதல் பட்டதாரி, அண்ணல் அம்பேத்கர், அயோத்திதாசப் பண்டிதர், காந்தியடிகள் போன்ற பேராளுமைகளோடு இணைந்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடியலுக்காக உழைத்த "திராவிடமணி" இரட்டைமலையாரின் பிறந்தநாளில் அவரது பங்களிப்புகளை நினைவுகூர்ந்து போற்றுகிறேன்."என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

stalin wishes to irattamalai srinivasan birthday 2022


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->