மெரினாவில் விழா கோலாகலம்: அண்ணா பதக்கம், கோட்டை அமீர் விருது, காந்தியடிகள் பதக்கம் வழங்கி சிறப்பித்தார் ஸ்டாலின்...!
Stalin honored recipients by presenting Anna Medal Fort Amir Award and Mahatma Gandhi Medal
நாடு முழுவதும் இன்று 77-வது குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் கவர்னர் ஆர்.என். ரவி தேசியக்கொடியை ஏற்றினார். அதன்பிறகு, முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வீரத் தீர செயலுக்கான அண்ணா பதக்கம், கோட்டை அமீர் மத நல்லிணக்க விருது, காந்தியடிகள் காவலர் பதக்கம் மற்றும் சிறந்த நெல் உற்பத்தி, சிறந்த காவல் நிலைய விருதுகள் உள்ளிட்ட பல பரிசுகளை வழங்கி வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார்.

சிறந்த காவல் நிலைய விருது
மதுரை மாநகரம்
திருப்பூர் மாநகரம்
கோயம்புத்தூர் மாவட்டம்
காந்தியடிகள் காவலர் பதக்கம்
விழுப்புரம் மண்டல மத்திய நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளர் நடராஜன்
விழுப்புரம் மாவட்ட ஆரோவில் காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் சத்யாநந்தன்
கள்ளக்குறிச்சி மாவட்ட சின்னசேலம் காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் மணிகண்டன்
கடலூர் மாவட்ட புத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் நடராஜன்
சேலம் மாவட்ட மத்திய நுண்ணறிவு பிரிவு தலைமை காவலர் கண்ணன்
வீரத் தீர செயலுக்கான அண்ணா பதக்கம்
நீலகிரி மாவட்ட தீயணைப்புத்துறை ஓட்டுனர் சங்கர்
தீயணைப்பு துறையினர் சுரேஷ் மற்றும் ரமேஷ்
கன்னியாகுமரி மாவட்டம் பீட்டர் ஜான்சன் (மறைந்தவர்)
கோட்டை அமீர் மத நல்லிணக்க விருது
திருப்பூர் மாவட்டம் கலிமுல்லா
சிறந்த நெல் உற்பத்தி விருது – சி. நாராயணசாமி நாயுடு விருது
தஞ்சாவூர் மாவட்ட விவசாயி க. வீரமணி
இந்த ஆண்டு குடியரசு தின விழா, நாட்டின் வீரங்கள், காவல் துறை மற்றும் விவசாயிகளின் சாதனைகளை முன்னிறுத்தும் விதமாக சிறப்பாக நடைபெற்றது.
English Summary
Stalin honored recipients by presenting Anna Medal Fort Amir Award and Mahatma Gandhi Medal