ஸ்டாலின் மைத்துனருக்கு நெஞ்சுவலி! ஆளுங்கட்சி தான் காரணம் என புகார்!
ஸ்டாலின் மைத்துனருக்கு நெஞ்சுவலி! ஆளுங்கட்சி தான் காரணம் என புகார்!
தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலினின் சகோதரர் நாகை மாவட்டம் திருவெண்காட்டை சேர்ந்த டாக்டர் ராஜமூர்த்தி (வயது 55). இவர் அரசு மருத்துவமனையில் கடந்த 28 ஆண்டுகளாக டாக்டராக பணியாற்றி வருகிறார். கடந்த 9 ஆண்டுகளாக செம்பனார்கோவில் வட்டார மருத்துவ அலுவலராக பொறுப்பில் உள்ளார். மேலும் அரசு மருத்துவமனை டாக்டர்கள் சங்கத்திலும் பொறுப்பு வகித்து வருகிறார்.
ஆக்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டார மருத்துவ அலுவலராக தற்போது ராஜமூர்த்தி பணியாற்றி வருகிறார். அங்கு பணியில் இருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அவரை சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதித்து முதல் கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் நாகை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் நிவேதா முருகன் மற்றும் கட்சியினர் மருத்துவமனைக்கு வந்து ராஜமூர்த்தியிடம் உடல் நலம் குறித்து விசாரித்தனர்.

நாகை மாவட்ட சுகாதார பிரிவு துணை இயக்குனர் அலுவலகத்தில் இருந்து போனில் தொடர்பு கொண்டு உங்களை நாகைக்கு இடமாற்றம் செய்துள்ளோம். எனவே ஆக்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து வெளியேறுங்கள் என்று கூறினர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளானேன். இந்த சம்பவத்தால் எனக்கு மாரடைப்பு ஏற்பட்டது.
முந்தைய நிகழ்வுகளை மனதில் வைத்து ஆளுங்கட்சியினர் எனக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தனர். தற்போது இடமாற்றம் செய்து நாகை செல்லும் படி வற்புறுத்துகின்றனர். என்னை விருப்ப ஓய்வு பெற சொன்னால் அதை ஏற்று இருப்பேன். என் உடல் நலம் பாதிக்கப்பட்டதற்கு ஆளுங்கட்சியினர் தான் காரணம் என ராஜமூர்த்தி கூறியுள்ளார்.
English Summary
stalin brother in law admitted in hospital for heart attack