ரூ.3 கோடி ஆவின் வேலை மோசடி வழக்கு: முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு பாஸ்போர்ட்டை திரும்ப வழங்க ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் உத்தரவு! - Seithipunal
Seithipunal


கடந்த அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் ஆவின் உள்ளிட்ட அரசுத் துறைகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.3 கோடி நிதி மோசடியில் ஈடுபட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜிக்கு அவரது பாஸ்போர்ட்டைத் திரும்ப வழங்க ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட செசன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் தொடர்ச்சியாக, பல்வேறு கட்ட விசாரணைகளுக்குப் பிறகு முதன்மை மாவட்ட நீதிபதி கந்தகுமார் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் ஆவின் மற்றும் அரசு நிறுவனங்களில் பணி நியமனம் பெற்றுத் தருவதாகப் பலரிடம் ரூ.3 கோடி வரை பணம் பெற்று ஏமாற்றியதாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி உட்பட 8 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டு, ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டுப் பின்னர் ஜாமினில் வெளிவந்தார். இது தொடர்பான வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட செசன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இவ்வழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்வதைத் தடுக்கும் பொருட்டுத் தனது கடவுச்சீட்டை (Passport) நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார். மேலும், வழக்கு விசாரணைக்குத் தடையின்றி ஆஜராக வேண்டும் மற்றும் சாட்சிகளைக் கலைக்கக் கூடாது என்ற நிபந்தனைகளும் விதிக்கப்பட்டிருந்தன.

இதனிடையே, அவரது பாஸ்போர்ட்டைத் திரும்ப ஒப்படைக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கினை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாஸ்போர்ட்டை திரும்ப வழங்க உத்தரவிட்டது. அதன் அடிப்படையில், ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் இன்று முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியின் பாஸ்போர்ட்டை முறைப்படி திரும்ப வழங்க ஆணை பிறப்பித்துள்ளது. இருப்பினும், அவர் வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்வதாக இருந்தால் அதற்கு முன்னதாக நீதிமன்றத்தின் முன்அனுமதியைக் கட்டாயம் பெற வேண்டும் என்ற முக்கிய நிபந்தனையுடன் பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Srivilliputhur Court Returns Passport to Former AIADMK Minister KT Rajenthra Bhalaji Job Scam Case


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...


செய்திகள்



Seithipunal
--> -->