"உள்நோக்கம் எதுவுமில்லை, யாரையும் புண்படுத்த விரும்பவில்லை": சட்டப்பேரவையில் தமது உடல்மொழி குறித்து முதலமைச்சர் விஜய் விளக்கம்! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி நடைபெற்ற காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, தமது பதிலுரையின் இடையேயான உடல்மொழி தொடர்பாக எழுந்துள்ள கருத்துகளுக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் அதிகாரப்பூர்வ விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சட்டமன்றத்தில் 7.9.2026 அன்று காவல்துறை மானியக் கோரிக்கையில், என்னுடைய பதிலுரையின் இடையேயான எனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டதுதானே தவிர, அது எவ்வகையிலும் உள்நோக்கம் கொண்டதில்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஆகவே, தனிப்பட்ட முறையில் யார் மனதையும் புண்படுத்துகிற செயலாக அதை அர்த்தம் கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் போது முதலமைச்சரின் பதிலுரை மற்றும் சட்டமன்றத்தில் நடைபெற்ற விவாதங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் மற்றும் கூட்டணிக் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்டவை விமர்சனங்களை முன்வைத்து வந்த சூழலில், முதலமைச்சர் விஜய் இந்த விளக்கத்தை அளித்து சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முயன்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

CM Vijay Clarifies Assembly Body Language Was Unintentional Appeals Not to Take Personal Offense


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...


செய்திகள்



Seithipunal
--> -->