புதிய தலைமைச் செயலக வளாகம்: பட்டினம்பாக்கத்தில் 25 ஏக்கர் வீட்டு வசதி வாரிய நிலம் தேர்வு..! - Seithipunal
Seithipunal


முதல்​வர் விஜய் சட்டப்பேரவையில் புதிய தலை​மைச் செயலக வளாகம் அமைக்கப்படும் என அறிவித்தார். அதற்கு சென்னை பட்​டினப்​பாக்​கம் ஃபோர்​ஷோர் எஸ்​டேட்​டில் உள்ள 25 ஏக்​கர் வீட்டு வசதி வாரிய நிலம் தேர்வு செய்​யப்​பட்​டிருப்​ப​தாகத் தகவல் வெளி​யாகி​யுள்​ளது.

சென்னை தலை​மைச் செயல​கம் கடும் இட நெருக்​கடி​யில் இருப்​ப​தால், தலை​மைச் செயல​கம் மற்​றும் சட்​டப்​பேர​வையை வேறு இடத்​துக்கு மாற்ற நீண்ட கால​மாக முயற்​சிகள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்றன.

ராணுவத்​துக்கு சொந்​த​மான புனித ஜார்ஜ் கோட்​டை​யில்தான் தற்​போது தலை​மைச் செயல​கம் மற்​றும் சட்​டப்​பேரவை இயங்கி வரு​கின்றன. அங்கு தலை​மைச் செயல​கத்தை விரி​வாக்​கம் செய்ய இந்​திய தொல்​லியல் துறை அனு​மதி அளிப்​ப​தில்​லை என்பதால், இன்​றும் கடும் இடநெருக்​கடி​யில் தலை​மைச் செயல​கம் இயங்கி வரு​கிறது.

இந்​நிலை​யில் முதல்​வர் விஜய் கடந்த செப்​டம்பர் 04-ஆம் தேதி 110 விதி​யின் கீழ் ரூ.1,200 கோடி​யில் 20 லட்​சம் சதுர அடி பரப்​பில் ஒருங்​கிணைந்த புதிய தலை​மைச் செயல​கம் மற்​றும் சட்​டப்​பேரவை வளாகம் அமைக்​கப்​படும் என்று அறி​வித்​திருந்​தார்.

இதனைத் தொடர்ந்​து, அரசு சார்​பில் சென்னை பட்​டினப்​பாக்​கம் கடற்​கரையை ஒட்​டி​யுள்ள அரசுக்கு சொந்​த​மான ஃபோர்​ஷோர் எஸ்​டேட்​டில் புதிய சட்​டப்​பேரவை மற்​றும் தலை​மைச் செயலக வளாகம் அமைக்க அரசு முடிவு செய்​துள்​ள​தாக கூறப்படுகிறது.

இத்​திட்​டத்தை தொடங்​கு​வதற்​கான பணி​களை தமிழக அரசு தீவிரப்​படுத்​தி​யுள்​ளது. அதன் ஒரு பகு​தி​யாக தமிழ்​நாடு வீட்டு வசதி வாரி​யம் இத்​திட்​டத்​துக்கு தனது 25.16 ஏக்​கர் நிலத்தை வழங்​க​வும், சென்னை மாநக​ராட்​சி, அதன் சுமார் 1 ஏக்​கர் நிலத்தை வழங்​க​வும் இசைவு தெரி​வித்​துள்​ளன. இத்​திட்​டத்​துக்​கான நிர்​வாக ஒப்​புதலை விரை​வில் அரசு வழங்கவுள்ளது.

அதன்படி, இந்த புதிய தலை​மைச் செயலக வளாகம் 15 தளத்​தில் சுமார் 20 லட்​சம் சதுரடி கட்​டு​மான பரப்​பள​வில் கட்​டப்படவுள்​ளது. இந்த இடத்​தின் சந்தை மதிப்பு தற்போது சுமார் ரூ.2 ஆயிரம் கோடியாகும்.

அரசு சார்​பில் முதலில் பட்டினப்பாக்கம், கிண்​டி​யில் உள்ள நெடுஞ்​சாலை ஆராய்ச்சி நிலை​யம் மற்​றும் நந்​தம்​பாக்​கம் ஃபின்​டெக் சிட்டி அரு​கிலுள்ள இடம் ஆகிய 03 இடங்​கள் பரிசீலிக்​கப்​பட்​டது. இதில் 25 ஏக்​கர் நிலம் கிடைப்​ப​தால் பட்டினப்பாக்கம் தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளது. இந்த இடத்​துக்கு அருகே முதல்​வர் விஜய்​யின் இல்​லம் இருப்​பது குறிப்​பிடத்​தக்​கது. இந்த நிலம் அரசு குடி​யிருப்​பு​கள் அமைப்​ப​தற்​காக 1958-ஆம் ஆண்டு கையகப்​படுத்​தப்​பட்​டது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

25 acres of Housing Board land in Pattinapakkam selected for the construction of the new Secretariat complex


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...


செய்திகள்



Seithipunal
--> -->