நாம் தமிழர் கட்சியை சேர்ந்த மேலும் இருவர் கைது! - Seithipunal
Seithipunal


திருச்சி எஸ்பி வருண்குமார் மற்றும் நாம் தமிழர் கட்சி சீமான் இடையே மோதல் உச்சகட்டத்தை அடைந்து, இருவரும் ஒருவருக்கு ஒருவர் சவால் விட்டு விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்த விவரத்தில் முதல் தொடக்கம், புதுக்கோட்டையை சேர்ந்த ரவுடி ஒருவர் என்கவுண்டர் செய்யப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்து பேசிய சீமான், திருச்சி எஸ்பி வருண்குமார் சாதிய ரீதியான வன்மத்துடன் செயல்படுவதாக குற்றம் சாட்டினார். 

இதனை தொடர்ந்து அவதூறு வழக்கில் நாம் தமிழர் கட்சியின் சாட்டை துரைமுருகன் திருச்சி போலீசாரால் கைது செய்யப்பட, அவருடைய செல்போனில் இருந்த ஆடியோக்கள் வெளியாகின. 

இதனை எஸ்பி வருண்குமார் தான் பழிவாங்கும் நோக்கத்தோடு வெளியிட்டதாக நாம் தமிழர் கட்சியினர் குற்றம் சாட்டி கொந்தளிக்க, அது எல்லை மீறி சென்றது.

இதனையடுத்து, தன்னையும் தனது குடும்பத்தினரையும் அவதூறாக பேசியதாக தில்லை நகர் காவல் நிலையத்தில், திருச்சி எஸ்பி வருண்குமார் அளித்த புகாரின் பேரில், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், வருண்குமார் அளித்த புகாரின் பேரில் மேலும் இரண்டு பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தொடர்ந்து வரும் செப்டம்பர் 2 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்க, மதுரை சேர்ந்த ரகுமான், சண்முகம் ஆகியோர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

SP Varunkumar complaint NTK 2 arrest


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->