குஷ்பூவை சீண்டிய தருமபுரி எம்பி., மூக்குடைபட்ட சம்பவம்.! இந்த விளம்பரம் தேவையா.?!  - Seithipunal
Seithipunal


இன்று காலை கடலூர் புறப்பட்ட நடிகை குஷ்பு, சென்னை மதுராந்தகம் அருகே வந்து கொண்டிருந்தபோது அவர் கார் விபத்துக்குள்ளானது. அவர் காரின்  மீது டேங்கர் லாரி ஒன்று உரசி சென்றதால், இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் அவருக்கு காயம் ஏதும் ஏற்படாமல் மீட்கப்பட்டுள்ளார். மேலும் காரின் கதவை உடைத்து குஷ்பூ உட்பட 5 பேரை மீட்டுள்ளனர். இதனையடுத்து நடிகை குஷ்பு மாற்று காரில் கடலூர் புறப்பட்டு சென்றார். 

இதனை தொடர்ந்து அவர் தனது ட்வீட்டர் பக்கத்தில், "வேல் யாத்திரைக்காக சென்னையில் இருந்து கடலூர் சென்று கொண்டிருந்த போது மேல்மருவத்தூர் அருகே விபத்தை சந்தித்தேன். டேங்கர்ர் லாரி ஒன்றின் மீது மோதியது. கடவுளின் ஆசிர்வாதத்தால், எனக்கு எந்த காயமும் இல்லை. காவல்துறையினர் இதை விசாரித்து வருகின்றனர். கடவுள் முருகன் எங்களை காப்பாற்றி விட்டார்" என்று கூறியிருந்தார். 

இந்த நிலையில், இதுகுறித்து தருமபுரி எம்பி செந்தில்குமார், "பாதுகாப்பாக பயணியுங்கள். நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள். உங்கள் பகுத்தறிவு சிந்தனையை நான் எப்போதும் போற்றினேன். தயவுசெய்து நீங்கள் நீங்களாகவே இருங்கள். உங்கள் தனித்துவத்தை இழக்காதீர்கள்." என்று தெரிவித்துள்ளார். 

இதற்கு நெட்டிசன்கள் பலரும் குஷ்பூவுக்கு பகுத்தறிவு கற்றுக்கொடுக்கும் நீங்கள் ஸ்டாலின் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் போதிக்கலாமே.? என்று துர்கா ஸ்டாலின் குறித்து கேள்வி எழுப்பி  வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

senthilkumar mp tweet about kushboo accident


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal