கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் உயிரிழப்பு..? அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்ற செந்தில் பாலாஜி..!
Senthil Balaji visited the Karur Government Hospital in person
கரூரில் த.வெ.க. பிரசார கூட்டத்தில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் சிக்கி 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த துயர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த உயிரிழப்புகள் கரூர் மாவட்டத்தில் இருந்து வரும் தகவல்கள் கவலையளிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதனிடையே அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் மற்றும் ஏ.டி.ஜி.பி. தேவாசீர்வாதம் ஆகியோரை உடனடியாக கரூர் செல்ல முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்நிலையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கரூர் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார். அங்கு நிலவி வரும் சூழல் குறித்து மருத்துவர்களிடம் அவர் கேட்டறிந்து வருகிறார். இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Senthil Balaji visited the Karur Government Hospital in person