ஆர்வக்கோளாறு அண்ணாமலை... சுதந்திர காற்று என உருட்ட வேண்டாம்... பங்கம் செய்த செந்தில் பாலாஜி..!! - Seithipunal
Seithipunal


கடந்த டிசம்பர் மாதம் 10ம் தேதி திருச்சியில் பாஜக மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொள்வதற்காக பாஜக தலைவர் அண்ணாமலை, கர்நாடகாவை சேர்ந்த பாஜக தேசிய இளைஞரணி தலைவர் தேஜஸ்வி சூர்யா மற்றும் சில மாநில நிர்வாகிகள் விமானத்தில் பயணம் செய்தனர். அப்பொழுது ஓடு பாதையில் இருந்து விமானம் பறக்க தயாராகும்போது அண்ணாமலையும், தேஜஸ்வி சூர்யாவும் அவசரகால கதவை திறந்து விளையாடியுள்ளார். உடனே விமானிகளுக்கு அவசர ஒலி அடித்துள்ளது. பதறிப்போன விமானிகள் விமானத்தை நிறுத்திவிட்டு உள்ளே சென்று விசாரித்தபோது, அண்ணாமலையும், தேஜஸ்வி சூர்யாவும்தான் அவசரகால கதவை திறந்தது தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து இருவரையும் கடிந்த விமானிகள் விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளையும் கீழே இறக்கியுள்ளனர். விமான விதிகளின்படி அனைத்து பயணிகளையும் மீண்டும் சோதனை நடத்தியுள்ளனர். இதற்கிடையே, அண்ணாமலையும், தேஜஸ்வி சூர்யாவும் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்துள்ளனர். பின்னர் சுமார் 3 மணி நேரம் கழித்து விமானம் 300 பயணிகளுடன் திருச்சிக்கு கிளம்பியுள்ளது.

இந்த விவகாரம் குறித்து எந்த செய்தி ஊடகங்களும் பேசவில்லை. ஆனால் தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி இது குறித்து ட்விட்டர் பதிவு ஒன்றை அண்ணாமலையை மறைமுகமாக குறிப்பிட்டு போட்டிருந்தார். ஆனால் அதற்கு அண்ணாமலை எந்தவித விளக்கமும் அல்லது எதிர் கருத்தும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் தேசிய பயணிகள் விமான இயக்குனரகம் சம்பந்தப்பட்ட இருவர் மீது விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி "2 ஆர்வக்கோளாறுகள் விமானத்தின் எமர்ஜென்சி கதவை திறந்து விளையாடியது பற்றி டிச-29 அன்று நான் கேள்வி எழுப்பி இருந்தேன். இன்று டிஜிசிஏ விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. வெளிநாட்டு வாட்ச் கட்டுவது தேசப்பற்றென னருட்டிய பொய்யர், சுதந்திர காற்றை சுவாசிக்க கதவை திறந்தேன் என உருட்டாமல் இருந்தால் சரி" என அண்ணாமலையை கலாய்த்துள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜியின் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Senthil Balaji criticizes BJP President Annamalai


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->