முதலமைச்சர் ஐயா மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி - சீமானின் முதல் டிவிட்!
Seeman Thanks to CM Stalin For supporting
நாம் தமிழர் கட்சியின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் சமூக வலைதள பக்கம், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அவரது கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரின் டிவிட்டர் பக்கங்கள் நேற்று முடக்கப்பட்டது.
.jpg)
சென்னை போலீசாரும், திமுகவும் தான் இதற்க்கு காரணம் என்று ஒரு பக்கமும், பாஜக தான் காரணம் என்று மறுபக்கமும் சமூக வலைத்தளங்களில் பல கருத்துக்கள் பகிரப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், "நாம் தமிழர் சீமான், மே17 திருமுருகன் காந்தி ட்விட்டர் பக்கங்களை முடக்கப்பட்டது, கருத்துரிமைக்கு எதிரானது" என்று மத்திய அரசுக்கு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று காலை கண்டனம் தெரிவித்தார்.
இதன் மூலம் சீமான் டிவிட்டர் பக்கம் முடங்கியதற்கும், தமிழக அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று உறுதியான நிலையில், சீமான் புதிய டிவிட்டர் கணக்கை தொடங்கியுள்ளார்.
செந்தமிழன் சீமான் எனும் பெயரில் அவர் தொடங்கியுள்ள பக்கத்தில் முதல் பதிவாக, தமிலாஜிக்க முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
அவரின் அந்த பதிவில், "கருத்தினைக் கருத்தால் எதிர்கொள்ளத் திராணியற்று, எங்களது கீச்சகத்தை முடக்கி கருத்து சுதந்திரத்தை ஒடுக்கும் அடக்குமுறையைக் கண்டித்து தனது வலிமையானக் கருத்தைப் பதிவுசெய்து, துணைநிற்கும் மாண்புமிகு தமிழ்நாட்டு முதலமைச்சர் ஐயா மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி" என்று சீமான் தெரிவித்துள்ளார்.
English Summary
Seeman Thanks to CM Stalin For supporting