90% வேலையை தமிழர்களுக்கே ஒதுக்கும் வகையில் புதிய சட்டம்.! வெளியான தகவல்.!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்படும் மத்திய அரசு பணியிடங்களில் 90% வேலைவாய்ப்புகள் தமிழர்களுக்கே ஒதுக்கும் வகையில் சட்டம் இயற்றப்படும் என்று சீமான் கூறியுள்ளார். 

அடுத்த ஆண்டு தமிழத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க இருக்கின்றது. இதன் காரணமாக தமிழக காட்சிகள் யாவும், அதற்கான வேளையில் ஈடுபட்டு வருகின்றன. 

திமுக, அதிமுக போன்ற முக்கிய கட்சிகளும் புதிய நிர்வாகிகளை அமைப்பது போன்ற வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும்,கட்சியில் செயல்படாமல் இருக்கும் பலரையும் நீக்கியும் வருகின்றது. அதே நேரத்தில் இங்கிருந்து, அங்கே என்றும், அங்கிருந்து இங்கே என்று கட்சி காவலில் நிர்வாகிகள் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பர் சீமான் சமீபத்திய உரையில், "கல்வி, பொருளாதாரம், கலாச்சாரம், வேலைவாய்ப்பு போன்ற விஷயங்களை மாநிலங்களே பார்த்துக் கொள்ள வேண்டும் என்றுதான் தனித்தனியாக பிரிக்கப்பட்டன. ஆனால், தற்போது மத்திய அரசு மாநிலங்களின் எல்லா உரிமைகளையும் தன்வசம் எடுத்துக்கொள்கின்றன.

தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்படும் மத்திய அரசு பணியிடங்களில் 90% வேலைவாய்ப்புகள் தமிழர்களுக்கே ஒதுக்கும் வகையில் சட்டம் இயற்றப்படும் என்று கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SEEMAN RECENT SPEECH ABOUT TN JOBS 


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->