அரசு பள்ளியில் கழிவறை இல்லை, கார் பந்தயம் கேட்குதோ? கிழித்தெடுத்த சீமான்! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சீமான் தெரிவித்தாவது, "ஆசிரியர்களுக்கு ஊதியம் கொடுக்க காசு இல்லை, ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த மட்டும் காசு எங்கிருந்து வருகிறது. 

ஃபார்முலா 4 கார் பந்தயம் மேல் தட்டு மக்களின் விளையாட்டு. சென்னையில் நடைபெறும் இந்த கார் பந்தயத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 

கார் பந்தயம் நடைபெறும் இடத்திற்கு அருகே பல்வேறு குடிசைகள் உள்ளன. அதனை சரி செய்யலாம். சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது. அரசு பள்ளிகளில் அடிப்படை வசதி வசதிகள் இல்லை. வகுப்பறையில் மேல் சுவர் இடிந்து விழுகிறது, இதனை சரி செய்யலாம்.

இன்னும் மரத்தடியில் மாணவர்கள் படிக்கும் நிலை உள்ளது. போதிய கழிப்பறைகள் கூட இல்லாத நிலை உள்ளது. முதலில் இதனை சரி செய்ய வேண்டும். பிறகு கார் ரேஸ் நடத்திக் கொள்ளலாம்" என்று சீமான் தெரிவித்தார்.

முன்னதாக சென்னை சாலிகிராமத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவிக்கையில், "தமிழ் தேசியம் எழுச்சி அடைந்தால் திராவிடம், இந்திய தேசியம் செல்லாக்காசாகி விடும். நாங்கள் தனி நாடு கேட்கவில்லை, ஏன் கேட்கவில்லை என்றால் இந்த நாடு எங்கள் நாடு, பாரத நாடு பைந்தமிழர் நாடு.

இந்தியாவை இந்துக்கள் நாடு என சொல்வதை ஏற்க மாட்டேன் என அம்பேத்கர் சொன்னார். இந்திய நிலம் முழுவதும் தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள் வாழ்ந்தனர் என அம்பேத்கர் சொன்னார்.

தெற்காசிய நாடுகள் முழுவதும் வாழ்ந்தவர்கள் தமிழர்கள், மற்றவர்கள் வந்து குடி பெயர்ந்தவர்கள். சமஸ்கிருதம் படி என்று சொல்கிறார்கள், படித்தால் எந்த கோயிலில் வேலை கொடுப்பார்கள். ஒரே நாடு, ஒரே மொழி எல்லாம் ஏற்கிறேன், ஏன் காவிரியில் நீர் எனக்கு இல்லை.

என் வளம் எல்லாருக்கும், இழப்பு மட்டும் எனக்கா? ஒவ்வொரு நாளும் படகு பறிக்கப்படுகிறது, மீனவன் கைது செய்யப்படுகிறார்கள்” என்று சீமான் தெரிவித்திருந்தார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Seeman Condemn to F4 Car Race


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->