விஜயால் தமிழக காங்கிரஸ் இரண்டாக உடைக்கிறதா? 1996 வரலாறு மீண்டும் திரும்புகிறதா?
tvk dmk congress election alliance beraking
தொண்டர்களின் கருத்துக்கு எதிராக முடிவெடுத்தால் என்ன நடக்கும் என்பதற்கு 1996-ல் மூப்பனார் நடத்திய 'தமிழ் மாநில காங்கிரஸ்' பிளவே சாட்சி. அன்று அதிமுக-வுடன் கூட்டணி என்ற டெல்லியின் பிடிவாதத்தால் காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெல்ல முடியாமல் வீழ்ந்தது. 30 ஆண்டுகளுக்குப் பின், அதேபோன்றதொரு இக்கட்டான சூழல் இன்று விஜயால் மீண்டும் உருவாக வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருது தெரிவித்து வருகின்றனர்.
தற்போதைய நெருக்கடி:
திமுக - காங்கிரஸ் ஊசலாட்டம்: தேர்தல் பேச்சு தொடங்கும் முன்பே "அதிக தொகுதிகள்", "ஆட்சியில் பங்கு" என மாணிக்கம் தாகூர் கொளுத்திப் போட்ட நெருப்பு இப்போது தாரக மந்திரமாகியுள்ளது.
தவெக (விஜய்) ஈர்ப்பு: திமுக-வின் பிடிவாதத்தால் சலிப்படைந்துள்ள தொண்டர்கள், விஜய்யுடன் கூட்டணி அமைத்தால் 70-80 தொகுதிகளில் போட்டியிடலாம், கட்சிக்கு மரியாதை கிடைக்கும் என நம்புகிறார்கள்.
உள்கட்சி மோதல்: செல்வப்பெருந்தகை போன்ற தலைவர்கள் திமுக-வை ஆதரிக்க, மற்றொரு தரப்பு தவெக-வை நோக்கி நகர்கிறது.
1996 பிளவின் பின்னணி:
1996 பிளவு தொண்டர்களின் உணர்வுகளால் இயல்பாக நடந்தது. ஆனால், இப்போது ஒரு பிளவு ஏற்பட்டால் அது பதவிகளைத் தக்கவைக்கத் துடிக்கும் தலைவர்களின் மோதலாகவே இருக்கும். டெல்லி தலைமை விஜய்யுடன் கூட்டணி என முடிவெடுத்தால், செல்வப்பெருந்தகை மாற்றப்பட்டு, அந்த இடம் மாணிக்கம் தாகூர் தரப்பிற்குச் செல்ல வாய்ப்புள்ளது.
திமுக-வின் பிடிவாதம் அதிகரித்தால், 1996-ஐ விட வீரியமான ஒரு பிளவைத் தமிழக காங்கிரஸ் சந்திக்க நேரிடும். இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த முறை பிளவின் பின்னணியில் திமுக-வும் இருக்கும் என்பதுதான்.
English Summary
tvk dmk congress election alliance beraking