சென்னையில் திடீரென நிறுத்தப்பட்டுள்ள  4 போர் கப்பல்! மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை! - Seithipunal
Seithipunal


பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இருவரும் வருகிற 12,13 ஆகிய தேதிகளில் மாமல்லபுரத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

இந்நிலையில், இரு நாட்டு தலைவர்களின் பாதுகாப்பு காரணங்களுக்காக இன்று முதல் மாமல்லபுரம் நகரத்திற்குள் 4 சக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது 

மாமல்லபுரம் நகரத்தில் இயங்கி வந்த பேருந்து நிலையம் தற்காலிகமாக கிழக்கு கடற்கரை சாலைக்கு  மாற்றப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து ஒரு வாரகாலமாக மாமல்லபுரம் நகரத்திற்குள் செல்லும் வாகனங்களையும் அனைத்தையும் போலீஸ் முழு சோதனைக்கு பின்னரே அனுமதித்தனர்.

இந்தநிலையில், மாமல்லபுரம் கடற்கரை கோவில் அருகே கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடியும், சீன அதிபர் ஸீ ஜின்பிங்கும் ஒன்றாக இந்த நிகழ்ச்சிகளை பார்வையிட உள்ளனர். இரு நாட்டு தலைவர்களின் பாதுகாப்பு கருதி, இந்திய மற்றும் சீனா  நாட்டு கடற்படையை சேர்ந்த 4 போர்க்கப்பல்கள் மாமல்லபுரம் கடலில் நிறுத்தப்பட்டுள்ளன.

4 நாட்டிகல் மைல் தொலைவுக்கு ஒரு போர்க்கப்பல் என்றும் 10 நாட்டி கல் மைல் தொலைவு சுற்றளவைக் கண்காணிக்கும் வகையில் இருநாடுகளும் தலா 2 போர் கப்பல்களை, மாமல்லபுரம் கடலில் நிறுத்தி வைத்துள்ளன. மேலும் அதிவிரைவுப் படகுகளும் கடல் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

மாமல்லபுர கடற்பகுதிகளில் நாளை முதல் 13 ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லக் கூடாது என  தமிழக அரசு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. .
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

security tight in mahabalipuram


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->