துறைசார் ஆலோசனை ஆய்வு கூட்டம்...! இன்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில்...!
Sectoral consultation meeting Today under chairmanship Chief Minister MK Stalin
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயர் அதிகாரிகளுடன் இன்று, தமிழக அரசின் நலத்திட்டங்களை விரைவாக மக்களிடம் கொண்டு சேர்ப்பது குறித்து பல்வேறு துறைகளின் ஆலோசனை நடத்துகிறார்.

இதை தலைமை செயலகத்தில் இன்று காலை 11 மணிக்கு பல்வேறு துறைகள் சார்பாக ஆய்வுக்கூட்டம் நடைபெறவுள்ளது.மேலும், நெடுஞ்சாலை, வணிக வரி மற்றும் பதிவுத்துறை, உணவுத்துறை மற்றும் கூட்டுறவு துறை ஆகிய துறைகளின் சார்பில் ஆய்வுக்கூட்டம் நடைபெறவுள்ளது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் துறை அமைச்சர்கள் எ.வ.வேலு, மூர்த்தி, சக்கரபாணி, கே.ஆர்.பெரியகருப்பன் மற்றும் அந்தந்த துறை அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.
English Summary
Sectoral consultation meeting Today under chairmanship Chief Minister MK Stalin