அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு: 29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி - Seithipunal
Seithipunal


தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பான முக்கிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. குறிப்பாக பாஜக, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் (அமமுக), பாமக உள்ளிட்ட கட்சிகளுக்கு வழங்கப்படும் தொகுதிகள் குறித்து அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.

திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ள நிலையில், அதிமுக தரப்பில் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இருப்பினும் கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்கள் இடையே திரைமறைவில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

தகவல்களின் படி, பாஜக முதலில் 60 சட்டமன்றத் தொகுதிகள் வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியிடம் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற வாக்கு சதவீதத்தை அடிப்படையாகக் கொண்டு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இந்த கோரிக்கையை முன்வைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் 60 தொகுதிகளை வழங்க முடியாது என எடப்பாடி பழனிச்சாமி மறுத்ததாக கூறப்படுகிறது. பின்னர் பாஜக தனது கோரிக்கையை 30 தொகுதிகளாக குறைத்ததாகவும், அதற்கும் அதிமுக ஒப்புக்கொள்ளாமல் 29 தொகுதிகள் வழங்குவதாக முன்மொழிந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு பாஜக ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி, அதிமுக கூட்டணியில் பாஜக 29 தொகுதிகளில் போட்டியிடும் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், அதைவிட ஒரு தொகுதி கூடுதலாக பாஜக போட்டியிடும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு 9 தொகுதிகளும், அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பாமகக்கு 18 தொகுதிகளும் ஒதுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதைத் தவிர சிறிய கட்சிகளுக்கு தலா 1 அல்லது 2 தொகுதிகள் வழங்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

இதன் அடிப்படையில் அதிமுக சுமார் 170 தொகுதிகளில் நேரடியாக போட்டியிட திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமமுக தரப்பில் ஆரம்பத்தில் 13 தொகுதிகள் கேட்கப்பட்டாலும், அதிமுக 9 தொகுதிகள் மட்டுமே வழங்க தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அதிமுக மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், “அதிமுக மற்றும் பாஜக இடையேயான தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை ஏறக்குறைய முடிவுக்கு வந்துவிட்டது. பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 11ஆம் தேதி திருச்சியில் நடைபெறும் என்டிஏ பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். அதன் பிறகு மார்ச் 14ஆம் தேதி முதல் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை தொடங்கி தொகுதி பங்கீடு அறிவிக்கப்படும்” என தெரிவித்தார். 🗳️


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Seat distribution in AIADMK alliance 29 9How many seats will BJP AMMK have in AIADMK alliance Edappadi Palaniswami who did not come down


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->