அராஜக நடவடிக்கை... திமுககாவின் குடும்பக் காட்டாட்சி... சவுக்கு சங்கருக்கு ஆதரவாக அதிமுக கண்டனம்!
savukku sankar case dmk govt mk stalin admk
அதிமுக தரப்பில் விடுத்துள்ள கண்டான் செய்தியில், "சவுக்கு மீடியாவைச் சார்ந்த ஊழியர் ஜெயப்பிரகாஷ் மற்றும் முன்னாள் ஊழியர் லியோ ஸ்டாலின் ஆகியோரை விடியா திமுக அரசின் காவல்துறை கைது செய்திருப்பதாகவும், சவுக்கு மீடியாவின் அனைத்து ஊழியர்களையும் கைது செய்ய முனைவதாகவும் செய்திகள் வருகின்றன.
சவுக்கு சங்கர் அவர்களுக்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கிய பிறகும், சவுக்கு மீடியா செயல்பாட்டை முடக்க வேண்டும் என்ற ஒரே நோக்கில், "மற்றும் பலர்" என்று FIR-ல் போட்டு, அதை வைத்துக்கொண்டு அந்நிறுவனத்தின் இந்நாள், முன்னாள் ஊழியர்களை கைது செய்யத் துடிப்பது, திமுக அரசின் கொடுங்கோன்மை குணத்தையும், ஜனநாயக உரிமைகளை மதியாத தன்மையும் தோலுரித்து காட்டுகிறது
முறைகேடுகளின் மொத்த உருவமாக இருக்கும் இன்றைய ஸ்டாலின் மாடல் திமுக அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டினால், அதை ஏற்கவோ, மறுக்கவோ திராணியில்லாமல், கைது போன்ற அராஜக நடவடிக்கைகளால் ஆட்சிக்கு எதிரான ஜனநாயகக் குரலை ஒடுக்க நினைக்கும் திமுக-வின் கோரப் பாசிசப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
ஊடகங்களைத் தங்கள் கைப்பாவை போல மாற்ற நினைத்து, ஜனநாயகத்தின் குரல்வளையத்தை நசுக்கி, தங்கள் குடும்பக் காட்டாட்சியைத் தொடர்ந்திடும் திமுக-வின் தீய எண்ணம் ஒருபோதும் ஈடேறாது.
சவுக்கு மீடியா ஊழியர்கள் மீதான ஜனநாயக விரோத நடவடிக்கைகளை உடனடியாகக் கைவிடுமாறு ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறோம்" என்று தெரிவித்துள்ளது.
English Summary
savukku sankar case dmk govt mk stalin admk