பிரபல யூடியூபர் சாட்டை துரைமுருகன் வழக்கு என்ன ஆனது.! திருவிடைமருதூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.! - Seithipunal
Seithipunal


நாம் தமிழர் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சாட்டை துரைமுருகன், யூடியூப் வலைத்தளம் மூலமாக மிகவும் பிரபலமாக வளம் வந்தார். இவர் அரசியல் கட்சித் தலைவர்கள், அரசியல் நடப்புகளை விமர்சித்து பல்வேறு வீடியோக்களை வெளியிட்டு உள்ளார். இந்த நிலையில், சாட்டை துரைமுருகன் துரைமுருகன் மீது ஒரு பரபரப்பு புகார் எழுந்தது.

விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் குறித்து, திருச்சியை சேர்ந்த மெக்கானிக் கடை உரிமையாளர் அவதூறாக பேசியுள்ளார். இவரை நேரில் சென்று மிரட்டல் விடுத்த சாட்டை துரைமுருகன், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த கைதுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்த இருந்தார். 

ஆனால், கைதான யூடியூபர் சாட்டை துரைமுருகன் மீது குழந்தைகள் புகைப்படங்களை தவறாக பயன்படுத்தியது உள்ளிட்ட புகாரில் மேலும் 4 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

இந்நிலையில், தனக்கு ஜாமீன் வழங்குமாறு சாட்டை துறைமுருகன் தாக்கல் செய்த மனுவை விசாரணை செய்த திருவிடைமருதூர் நீதிமன்றம், ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து, மனு மீதான விசாரணையை வரும் 12 ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

sattai duraimurugan case issue


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->