''தொகுதி மக்களை தினமும் சந்திக்கிறேன்; பெரும் வரவேற்பு இருக்கிறது; தாராபுரத்தில் எனக்கு 100 சதவீதம் வெற்றி வாய்ப்பு இருக்கிறது''; சத்தியபாமா பேட்டி..!
Sathiyabhama says she has a 100 percent chance of winning in the dharapuram constituency
தமிழ்நாட்டில் மொத்தம் 07 தொகுதிகள் காலியாக உள்ள நிலையில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு மட்டும் வரும் அக்டோபர் 06-ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதன்படி, இந்த இரண்டு தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 09-ஆம் தேதி தொடங்கி 16-ஆம் தேதி நிறைவடையும் எனவும், வேட்புமனு திரும்ப பெற கடைசி நாள் செப்டம்பர் 16-ஆம் தேதியும் எனவும், வாக்குப் பதிவு அக்டோபர் 06-ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 09-ஆம் தேதி நடைபெறும் எனவும் இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், தாராபுரம் தொகுதியில் கடந்தத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட சத்யபாமா தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் இந்திராணியைவிட 16,727 வாக்குகளை கூடுதலாக பெற்று, மொத்தம் 81,100 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்தார். இந்தத் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட கௌரி சித்ரா மொத்தம் 46,438 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தை பிடித்தார்.
இந்நிலையில் தாராபுரம் முன்னாள் எம்.எல்.ஏ சத்யபாமா பிரபல செய்திசேவைக்கு தொலைப்பேசி வாயிலாக பிரத்யேக பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில் அவர் கூறியதாவது;

''கடந்த முறை தவெகவின் அலையில் எங்களின் கடும் உழைப்பால் வெற்றி பெற்றோம். ஆனால், தற்போது தவெகவின் செயல்பாடுகள் சிறப்பாக இருப்பதாலும், முதலமைச்சரின் நடவடிக்கையால் லஞ்சம் ஒழிப்பு இருந்து வருவதாலும், கடந்த முறை போன்று இந்த முறை வெற்றிக்கு கடின உழைப்பு தேவை இருக்காது என நினைக்கிறேன்.
தற்போது தவெகவில் எனக்கு மாவட்டச் செயலாளர் பதவி கிடைத்தப்பிறகு தினமும் காலை, மாலை என இரண்டு வேளையும் மக்களை நான் சந்தித்து வருகிறேன். இந்த ஆட்சியின் மீது மக்களுக்கும், குறிப்பாக பெண்களுக்கும் இருக்கும் நம்பிக்கையை பார்க்க முடிகிறது. மக்களும், 'நீங்க மீண்டும் வந்து எங்களுக்காக சேவை செய்ய வேண்டும்' என சொல்கிறார்கள். அதனால் மீண்டும் தாராபுரத்தில் எனக்கு 100 சதவீதம் வெற்றி வாய்ப்பு இருக்கிறது. இந்த இரண்டு தொகுதிகள் மட்டுமின்றி மீதமிருக்கும் தொகுதிகளிலும் எங்களுக்கான வெற்றி பிரகாசமாக வுள்ளது.'' என்று பேட்டியில் கூறியுள்ளார்.
English Summary
Sathiyabhama says she has a 100 percent chance of winning in the dharapuram constituency