நாளை ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவில் முக்கிய முடிவை அறிவிக்கவுள்ள சசிகலா..! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது.  திமுக மற்றும் அதிமுக, தங்களது கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளன. ஏனைய சிறிய கட்சிகளும் தேர்தல் கூட்டணியில் இணைவது, மற்றும் தொத்தி பங்கீடு குறித்த பேச்சு வார்த்தைகளில் தீவிரமாக இறங்கியுள்ளன. 

இதில், அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், அதிமுக பாஜக கூட்டணியில் இணைந்துள்ளார். இதனையடுத்து சசிகலா தனிக்கட்சி தொடங்கி தேர்தலை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நாளை மறைந்த அ.தி.மு.க. முன்னாள் பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதான் பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி இன்று சென்னையில் மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா மரியாதை செலுத்தினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது: "நாளை பசும்பொன்னில் நடைபெறும் ஜெயலலிதா பிறந்த நாள் கூட்டத்தில் முக்கிய முடிவை அறிவிக்க உள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Sasikala to announce important decision at Jayalalithaas birthday party tomorrow


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!


செய்திகள்



Seithipunal
--> -->