இருவரையும் நான் இணைப்பேன்.. களத்தில் இறங்கிய முக்கிய புள்ளி..!! - Seithipunal
Seithipunal


முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு சொத்துக் குறிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறைக்கு சென்றார். அப்போது தர்மயுத்தம் நடத்திக் கொண்டிருந்த ஓ பன்னீர்செல்வம் மீண்டும் அதிமுகவில் இணைந்து துணை முதலமைச்சரானார். அதையடுத்து, டிடிவி தினகரன், சசிகலாவின் சகோதரர் திவாகரன் ஆகியோர் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டனர். 

இதையடுத்து, டிடிவி தினகரன், திவாகரன் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. இந்த சூழ்நிலையில் டிடிவி தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை தொடங்கி நடத்தி வருகிறார். சசிகலாவின் சகோதரர் திவாகரன் அண்ணா திராவிட கழகம் எனும் பெயரில் கட்சியை தொடங்கினார். 

இதனிடையே தனது அண்ணா திராவிட கழகத்தை சசிகலா தலைமையில் அதிமுகவுடன் திவாகரன் இணைக்க உள்ளதாக தெரிவித்தார். நேற்று சசிகலாவின் கட்சியுடன், திவாகரனின் அண்ணா திராவிடர் கழகம் இணைக்கப்பட்டது. தஞ்சாவூரில் அமைந்துள்ள தமிழரசி திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சசிகலாவுடன் திவாகரனின் அண்ணா திராவிடர் கழகம் இணைக்கப்பட்டது.

இந்த விழாவில் பேசிய சசிகலா, அண்ணா திராவிடம் கழகம் இணைந்துள்ளது. இதேபோல பிரிந்து செயல்படும் அனைவரையும் ஒன்று சேர்த்து தமிழகத்தின் மிகப்பெரிய கட்சி நம் கட்சியின் என்று உருவெடுக்கும் வரை நான் ஓயமாட்டேன். எம்ஜிஆர், ஜெயலலிதாவின் பயிற்சி பட்டறையில் படித்தவள் சொல்கிறேன், வீர தமிழச்சியாக சொல்கிறேன், நான் இருக்கின்றவரை அதிமுகவை யாரும் அபகரிக்கவும், அழித்துவிடவும் முடியாது. திமுக எத்தனை கணக்கு போட்டாலும், அது பலிக்காது. 

அதிமுகவில் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு விதி வசத்தால் நான் சிறைக்கு சென்றேன். இதனால் கட்டுக்கோப்பாக இருந்த நமது கழகம் எதிரிகளின் ஆசைப்படி சிதறி போனது. எம்ஜிஆர் காலத்திலும், ஜெயலலிதா காலத்திலும் எத்தனையோ பேர் கட்சியை விட்டு போனாலும், கழகத்தின் வளர்ச்சிக்காக மீண்டும் அவர்கள் இணைந்துள்ளோம். பிரிந்தவர்களையும், கட்சியை எப்படி சேர்ப்பது என்ற கலையை நான் தெளிவாக கற்றுக் கொண்டு விட்டேன். இரு அணிகளாக பிரிந்தவர்களை மீண்டும் ஒன்றிணைத்து அவர்கள் நம் கட்சிக்காரர்கள் என்று பார்ப்போமே தவிர அவர் அந்த அணியை சார்ந்தவர். இவர் இந்த அணியை சார்ந்தவர் என்று நினைக்கவில்லை. தற்போது நடந்த நிகழ்வு மிகுந்த வேதனையை அளிக்கிறது.

இருவரும் தலைவர்களும் இதனை வருத்தத்துடன் பார்த்துக் கொண்டுதான் இருப்பார்கள். ஒரு சிலரின் தனிப்பட்ட தேவைக்காக ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள அப்பாவி  தொண்டர்களை ஏமாற்றுவதா ? சில சுயநலவாதிகள், தங்கள் இருக்கும் இயக்கம் எப்படிப்பட்ட இயக்கம், எப்படிப்பட்ட தலைவர் கொண்ட இயக்கம், நம் தலைவர்கள் பட்ட கஷ்டம் என்ன அவர்கள் செய்த தியாகம் என்ன.? எத்தனை கழகம் தொண்டர்கள் தங்கள் இன்னும் உரை தந்துள்ளனர் என்று சிந்திக்காமல், தங்களுக்கு கிடைக்க வேண்டிய ஆதாயத்தை மட்டும் மனதில் வைத்துக் கொண்டு செயல்படுவது எந்த விதத்தில் நியாயம் என கேள்வி எழுப்பினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sasikala says eps ops join


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->