40 வருட பயணம் முடிவு., வேதனையில் சசிகலா.! - Seithipunal
Seithipunal


மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு 40 ஆண்டுகளுக்கு மேலாக சமையல்காரராக பணிபுரிந்தவர் ராஜம்மாள். இவர் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து இன்று மருத்துவமனையில் ராஜம்மாளின் உடலுக்கு சசிகலா நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அதேபோல் ஓபிஎஸ்-ன் இரண்டாவது மகன் பிரதீப்பும் அஞ்சலி செலுத்தினார்.

சசிகலா விடுத்துள்ள இரங்கல் செய்தியில், "ராஜம்மாள் அவர்களின் மறைவு மிகவும் வேதனையையும், துயரத்தையும் எனக்கு அளித்துள்ளது. நம் அம்மா அவர்களின் வேதா இல்லத்தில், எங்களோடு பல ஆண்டுகள் வாழ்ந்துள்ளார். 

எங்கள் குடும்பத்தில் ஒருவராகவே இருந்துள்ளார். ராஜம்மாள், அம்மா அவர்கள் மீதும், என் மீதும் மிகுந்த பாசமும் , மரியாதையும் வைத்து இருந்தார். அம்மா அவர்களுக்கும், எனக்கும் எத்தனையோ சோதனையான காலக்கட்டங்களில் உறுதுணையாக இருந்துள்ளார். 

ராஜம்மாவின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்." என்று வி.கே.சசிகலா அந்த இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

sasikala mourning to rajammal


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!


செய்திகள்



Seithipunal
--> -->