சசிகலாவின் அடுத்த கட்ட திட்டம்.. உற்று கவனிக்கும் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ்.!! - Seithipunal
Seithipunal


சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று விடுதலையான சசிகலா, திடீரென அரசியலில் விட்டு விலகுவதாக அறிவித்தது பெரும் பேசுபொருளாக மாறியது. அவரது முடிவை அறிந்த ஆதரவாளர்களும், அமமுக தொண்டர்களும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். 

ஆனால் அதிமுகவில் அடுத்தடுத்து நடக்கும் விஷயங்கள் விவாதத்துக்கு உள்ளானது. சட்டமன்ற தேர்தல் தோல்வி, அதிமுக தலைமையின் முக்கிய தலைவர்கள் சசிகலாவுக்கு எதிராக பேசுவது, சசிகலாவுக்கு ஆதரவு சசிகலாவுக்கு அதிமுகவும் எந்த தொடர்பும் இல்லை என பேட்டி அளிப்பது, சசிகலாவுக்கு ஆதரவளிக்கும் நபர்கள் கட்சி இருந்து நீக்கப்படுவது என அடுத்தடுத்து நடவடிக்கைகள் பாய்ந்து வருகிறது. 

இதனால், சசிகலா ஆதரவாளர்கள் சோர்ந்து போயிருக்கும் நிலையில், ரஜினிகாந்தை சந்தித்து அதிரடி காட்டி உள்ளார் சசிகலா. ரஜினியை தொடர்ந்து சசிகலா யாரை சந்திக்க உள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. யாரும் எதிர்பார்க்காத வகையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேரில் சென்று சந்திக்க உள்ளார். விஜயகாந்த்தை சந்தித்தால் அரசியல் வட்டாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என சசிகலா நினைப்பதாக  கூறப்படுகிறது.

இதையடுத்து, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை, சசிகலா சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கட்சி இணைப்புக்கு நான் பேசவா என ஏற்கனவே சீமான் கேட்டிருந்த நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இதனிடையே அதிமுக கூட்டணியில் இடம் பெற்றவர்கள் பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை. இந்நிலையில், பிற கட்சி தலைவர்களை சசிகலா சந்திக்க உள்ளதை ஓபிஎஸ், இபிஎஸ் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sasikala may be meet seeman


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->