அலங்காநல்லூரில் அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலா அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி அவனியாபுரம், பாலமேடு ஆகிய பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று முடிந்தது. அலங்காநல்லூரில் நேற்று முன் தினம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற இருந்தது, முழு ஊரடங்கு காரணமாக நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. 

நேற்று காலை 7 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. அதில், 700 காளைகளும், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். போட்டியில் ஒரு சுற்றுக்கு 30 மாடுபிடி வீரர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டார்கள். போட்டியை காண்பதற்காக 150 பார்வையாளர்கள் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. 

ஜல்லிக்கட்டு போட்டியில் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்படும் அனைத்து காளைகளுக்கும் தலா ஒரு தங்கக்காசு வழங்கப்படுமென வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி அறிவித்திருந்தார். நேற்று அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் காளையும் களம் இறங்கியது. அந்த காளையை யாராலும் பிடிக்க முடியவில்லை.

சசிகலாவின் காளை அவிழ்த்து விடும்போது, சசிகலாவை அதிமுக வின் பொதுச்செயலாளர் என விழாக்குழுவினர் அடையாளப்படுத்தினர். சசிகலா காளை களம் இறங்கியபோது, அந்த காளை காளையை பிடிப்பவருக்கு தங்க மோதிரம் பரிசாக வழங்கப்படும் என அமைச்சர் மூர்த்தி அறிவித்தார். ஆனால், அந்த மாடு பிடிபடாமல் சென்றதால், மோதிரம் மாட்டின் உரிமையாளர்கள் வழங்கப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sasikala introduced by admk general secretary


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->