CM ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த தூய்மை பணியாளர்கள்!
sanitation worker mk stalin DMK Tamil Nadu government
சென்னையில் நடைபெற்ற தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்ததை பல்வேறு அரசியல் தலைவர்கள் கடுமையாக விமர்சித்தனர். இதன் பின்னர், தமிழக அரசு தூய்மை பணியாளர்களுக்காக 6 முக்கிய நலத்திட்டங்களை அறிவித்தது. இதில், இலவச காலை உணவு, உயர்கல்வி ஊக்கத்தொகை, சுயதொழில் உதவி, 30 ஆயிரம் வீடுகள், ரூ.10 லட்சம் காப்பீடு, பணியின்போது உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம் உள்ளிட்ட திட்டங்கள் இடம்பெற்றன.
இந்த அறிவிப்புக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், 200-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பதாகைகள் ஏந்தி பேரணி நடத்தினர். பேரணி முடிவில் அமைச்சர் சேகர் பாபு மற்றும் மாநகர மேயர் பிரியா, பணியாளர்களுக்கு உணவு பரிமாறினர். பின்னர், தூய்மை பணியாளர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றியை வெளிப்படுத்தினர்.
முதலமைச்சர் ஸ்டாலின், தனது பதிவில், பல்வேறு தூய்மை பணியாளர் சங்க நிர்வாகிகளை சந்தித்து, அரசு அறிவித்த திட்டங்களுக்கு அவர்கள் தெரிவித்த மகிழ்ச்சியையும், முன்வைத்த கூடுதல் கோரிக்கைகளையும் பதிவு செய்தார். அவற்றை பரிசீலித்து நிறைவேற்றுவதாக உறுதியளித்த அவர், எப்போதும் உழைக்கும் மக்களுக்கு துணையாக நிற்போம் என வலியுறுத்தினார்.
English Summary
sanitation worker mk stalin DMK Tamil Nadu government