காவல்துறை அக்கிரமாக நடந்து கொள்வது ஆட்சிக்கு நல்லதல்ல - போராடியவர்கள் கூண்டோடு கைது! - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரம்: சுங்குவார் சத்திரத்தில் தொழிற்சங்க அங்கீகாரம், 8 மணி நேர வேலை, ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாம்சங் நிறுவனத் தொழிலாளர்கள் கடந்த சில வாரங்களாக வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், தொழிலார்களின் போராட்ட  பந்தலை காஞ்சிபுரம் மாவட்ட வருவாய்த்துறையினர் நேற்று இரவோடு, இரவாக அகற்றியுள்ளனர். மேலும், போராட்டத்தை முன்னெடுத்த தொழிற்சங்க நிர்வாகிகள் 10 பேரை கைது செய்து சட்டவிரோதக் காவலில் அடைத்து வைத்து உள்ளதாக சொல்லப்படுகிறது. 

இந்த நிலையில், இன்று மீண்டும் போராட்டம் நடத்திய சாம்சங் நிறுவனத் தொழிலாளர்கள் மற்றும் சிஐடியூ சவுந்தரராஜன் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

முன்னதாக போராட்டத்தின் இடையே செய்தியாளர்களை சந்தித்த சிஐடியூ தலைவர் சவுந்திரராஜன் தெரிவிக்கையில், "இவ்வளவு அக்கிரமாக காவல்துறை நடந்து கொள்வது ஆட்சிக்கு நல்லதல்ல” என்று தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கம் தெரிவிக்கையில், "சாலை விபத்தின் போது அங்கு வந்த காவலர்களை தாக்கியவர்களே கைது செய்யப்பட்டனர். அவர்கள் யாரும் ரிமாண்ட் செய்யப்படவில்லை. சொந்த ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.

சாம்சங் தொழிலாளர்களின் பெரும்பாலான கோரிக்கைகளை நிறைவேற்ற அந்நிறுவனம் முன்வந்துள்ளது. சிஐடியூ தொழிற்சங்கத்தை அங்கீகரிக்க வேண்டும் என்ற விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது. எனவே, போராட்டத்தைக் கைவிட வேண்டும்.

நீதிமன்றத்தில் உள்ள இவ்விவகாரத்தில், நீதிமன்றம் என்ன முடிவு கூறினாலும் அதனை அரசு செயல்படுத்தும். சாம்சங் நிறுவனம் வேறு மாநிலத்திற்கு இடம்மாறுவதாக வெளியாகும் செய்திகள் தவறானவை. தொழில் முதலீட்டுக்கு உகந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது" என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Samsung workers protest tn police action


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->