#சேலம் || தனியார் பள்ளி ஆசிரியர் கண்டிப்பு., மாணவன் தற்கொலை?!  - Seithipunal
Seithipunalசேலம் அருகே ஆசிரியர் கண்டித்ததால், மாணவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறி, மாணவரின் பெற்றோர், உறவினர்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சேலம் மாவட்டம் : மஞ்சுளம் பள்ளம் பகுதியைச் சேர்ந்த ரத்தினம் மகன் சஞ்சய் கண்ணன் (வயது 15). இவர் சேலம் 4 ரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தார். 

கடந்த 18-ம் தேதி பள்ளி முடிந்து பின்னர் வீட்டுக்கு வந்த மாணவன் சஞ்சய் கண்ணன், வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு போலீஸார், மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாணவன் தற்கொலை குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று காலை சேலம் ஆட்சியர் அலுவலகம் வந்த மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், பள்ளி ஆசிரியர் கண்டித்ததால் தான், மாணவன் சஞ்சய் கண்ணன் தற்கொலை செய்து கொண்டதாகவும், அந்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SaLeM Private School student suicide


கருத்துக் கணிப்பு

ஈரோடு இடைத்தேர்தலில் யாருக்கு வெற்றி கிடைக்கும்?Advertisement

கருத்துக் கணிப்பு

ஈரோடு இடைத்தேர்தலில் யாருக்கு வெற்றி கிடைக்கும்?
Seithipunal