ரூ.1,020 கோடி நலத்திட்டங்கள், 2.44 லட்சம் பயனாளிகள்...! - தென்காசியில் சாதனை நிகழ்த்திய மு.க.ஸ்டாலின்...!
Rs1020 crore welfare schemes 2POINT44 lakh beneficiaries MK Stalin achieves feat Tenkasi
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக மாவட்டங்களுக்கு தொடர்ச்சியாக சுற்றுப்பயணம் செய்து, அரசு சார்பில் நிறைவு பெற்ற பணிகளை திறந்து வைப்பதோடு புதிய வளர்ச்சி முயற்சிகளுக்கும் அடிக்கல் நாட்டி வருகிறார்.ஏற்கனவே நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பணி முடித்த அவர், இன்று தென்காசி மாவட்டம் வந்தார்.

நேற்று மாலை மதுரைக்கு விமானம் மூலம் வந்து அங்கிருந்து கார் மூலமாக கோவில்பட்டி சென்ற முதலமைச்சருக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு நகர தி.மு.க. அலுவலகத்தையும், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையையும் திறந்து வைத்தார்.
இன்று காலை தென்காசியில் வருகை தந்த முதலமைச்சர், சீவநல்லூரில் “கலைஞர் கனவு இல்ல” திட்டத்தின் ஒரு லட்சாவது வீட்டை திறந்து வைத்தார். பின்னர் அனந்தபுரம் பகுதியில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்று, மொத்தம் ரூ.1,020 கோடி மதிப்பிலான 200க்கும் மேற்பட்ட வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார் மற்றும் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
இதில், ரூ.141.60 கோடியில் 117 திட்டப்பணிகள் திறந்து வைக்கப்பட்டன; மேலும் ரூ.291.19 கோடியில் 83 புதிய திட்டங்கள் தொடங்கப்பட்டன. இதோடு, 2.44 லட்சம் பயனாளிகளுக்கு ரூ.587.39 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் தென்காசி மாவட்டத்தில் ரூ.22,912 கோடி மதிப்பில் 6 லட்சம் பயனாளிகள் நலத்திட்ட உதவிகள் பெற்றுள்ளனர்.
மேலும் ரூ.2,074 கோடியில் 37,221 வளர்ச்சி பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மொத்தத்தில், ரூ.24,986 கோடி மதிப்பிலான சாதனைமிகு வளர்ச்சி பணிகள் தென்காசி மாவட்டத்தில் நடைபெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
English Summary
Rs1020 crore welfare schemes 2POINT44 lakh beneficiaries MK Stalin achieves feat Tenkasi