குட் நியூஸ்!! ரூ. 2000 மாதாந்திர பயண அட்டை..! சென்னையில் இதனை அறிமுகம் செய்தவர் யார் தெரியுமா? - Seithipunal
Seithipunal


சென்னை, மாநகர் போக்குவரத்துக் கழகத்தில்,  இன்று முதல் ரூ.2000 மதிப்பிலான குளிர்சாதன பேருந்து உட்பட அனைத்து பேருந்துகளிலும் விருப்பம்போல் பயணம் செய்யும் மாதாந்திர சலுகைப் பயண அட்டை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அமைச்சர் சிவசங்கர்:

இதில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் இன்று மந்தைவெளி பேருந்து நிலையத்தில்,மாநகர் போக்குவரத்துக் கழக பயணிகளின் வசதிக்காக குளிர்சாதன பேருந்து உட்பட அனைத்து பேருந்துகளிலும் பயணம் செய்யும் வகையிலான ரூ.2000 மதிப்புடைய விருப்பம்போல் பயணம் செய்யும் (TAYPT) மாதாந்திர பயண அட்டையை  அறிமுகப்படுத்தினார்.

போக்குவரத்து:

மேலும் இந்நிகழ்ச்சியில் மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்,  தலைமை நிதி அலுவலர், இ.ஆ.ப., இணை மேலாண் இயக்குநர்,மாநகர் போக்குவரத்துக் கழக பொது மேலாளர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதற்கு முன்பே நடைமுறையிலுள்ள, ரூ.1000 மதிப்பிலான விருப்பம்போல் பயணம் செய்யும் மாதாந்திர சலுகைப் பயண (குளிர்சாதன பேருந்து நீங்கலாக) அட்டையையும் பயணிகள் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய திட்டம் தற்போது மக்களிடையே மகிச்சியையும் பயணம் செய்யும் ஆர்வத்தையும் கொண்டு வந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rs 2000 Monthly Travel Card Do you know who introduced this in Chennai


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->