அதிமுகவை புறந்தள்ளிவிட்டு, இப்போது தவெகவின் புறம்போக்காக தவிக்கிறீர்களே? ஆர்பி உதயகுமார் கிண்டல்..! - Seithipunal
Seithipunal


''அதிமுகவின் முன்னாள் போர்ப்படை தளபதிகளுக்கு இப்போது தவெகவில் போர் கருவிகளை துடைத்து சுத்தப்படுத்தி வைக்கின்ற அலங்கார பதவிகளை முதல்வர் விஜய் வாரி வழங்கியுள்ளார்.'' என்று 
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் இன்று வெளியிட்டுள்ள வீடியோ வெளியிட்டு கிண்டல் அடித்துள்ளார்.

அதிமுகவில் ராஜாவாக வலம் வந்த முன்னாள் அமைச்சர்கள் விராலிமலை விஜயபாஸ்கர், கரூர் விஜயபாஸ்கர், தூத்துக்குடி கடம்பூர் ராஜூ, உடுமலை ராதாகிருஷ்ணன், எம்எஸ் ஆனந்தன் எல்லாம் தவெகவில் கூஜாக்களாக மாறி அவதிப்படுகின்றனர் என்று அந்த வீடியோவில் பேசியுள்ளார்.

அத்துடன், வெகுமானத்தை எதிர்பார்த்து போனவர்கள், இன்றைக்கு தன்மானத்தை இழந்து நிற்கிறார்கள் என்றும், அதிமுகவை புறந்தள்ளிவிட்டு, இப்போது தவெகவின் புறம்போக்காக தவிக்கிறீர்களே? என்று விமர்சித்துள்ளார்.

மேலும், அதிமுகவின் முன்னாள் போர்ப்படை தளபதிகளுக்கு இப்போது தவெகவில் என்ன பதவி கொடுத்துள்ளார்கள்? போர் கருவிகளை துடைத்து சுத்தப்படுத்தி வைக்கின்ற அலங்கார பதவிகளை முதல்வர் விஜய் வாரி வழங்கியுள்ளதாக விமர்சித்துள்ளார்.

இவர்களுக்கெல்லாம் கட்சியில் கொள்கை பரப்புச் செயலாளர் பதவி கொடுக்கவா முடியும்? என்றும், ஆளுங்கட்சியில் கொள்ளையடித்து குபேரனாக வரலாம் என்று கனவு கண்டு கொண்டிருந்த விஜயபாஸ்கர்களுக்கு, வழங்கிய பதவிகளால் தலையில் பேரிடி விழுந்திருக்கிறது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

இப்போது உங்கள் முகத்தை எந்த தைரியத்துடன் வெளியே காட்டப் போகிறீர்கள்? என்று கேள்வி எழுப்பியதோடு, கொள்கை, கோட்பாடுகள், லட்சியம், குறிப்பாக நன்றியை மறந்தவர்களுக்கு விஜய் திருநெல்வேலி அல்வா கிண்டி கொடுத்து விட்டார் என்று கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.

அத்துடன், இருக்கும் இடத்தில் இருந்தால்தான் எல்லோருக்கும் மரியாதை என்றும், அதிலும் கூட கடம்பூர் ராஜுவிற்கு பதவி கிடைக்கவில்லை. உள்ளதும் போச்சுடா லொல்ல கண்ணா என்பது போல் ராஜா மாதிரி இருந்த நீங்கள் விஜய்க்கு கூஜா தூக்க போனீர்கள்? உங்கள் மனசாட்சியே உங்களை கொல்லும் என்று ஆர்பி உதயகுமார் வீடியோ பதிவில் கூறியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

RP Udayakumar taunted that those who left the AIADMK and joined the TVK are suffering as outsiders


கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...



Advertisement

கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...




Seithipunal
--> -->