இலங்கைக்கு எதிரான டெஸ்ட் ஆட்டம்: சாய் சுதர்சனுக்கு பதில் சர்பராஸ் கான் அணியில்..? - Seithipunal
Seithipunal


இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 02 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. முதல் டெஸ்ட் வரும் 15-ஆம் தேதி காலி மைதானத்தில் தொடங்கவுள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியில் தமிழக வீரரான இடது கை ஆட்டக்காரர் சாய்சுதர்சன் சேர்க்கப்பட்டிருந்தார். அவருக்கு வலது கால் பெருவிரலில் எலும்பு முறிவு ஏற்பட்டு அவதிப்பட்டு வருகிறார்.  இந்நிலையில் அவர் உடற்தகுதியை பொறுத்தே இலங்கை தொடருக்கு செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் சாய் சுதர்சனுக்கு உடல் ரீதியாக குணமடைதலுக்கு கூடுதல் அவகாசம் அளிக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அவரது உடல்நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்பட்டாலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் பாதுகாப்பாகத் திரும்புவதற்குத் தேவையான அளவுக்கு அது இன்னும் முழுமையடையவில்லை என கூறப்படுகிறது. 

இதன் காரணமாக அவருக்கு மாற்றுவீரராக சர்ப்ராஸ்கான், ருதுராஜ் கெய்க்வாட், ஷேக் ரஷீத் ஆகியோர் பரிசீலிக்கப்பட்டு வருகின்றனர். இதில் சர்ப்ராஸ்கான் சேர்க்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Sarfaraz Khan in the team to replace Sai Sudarshan in the Test series against Sri Lanka


கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...



Advertisement

கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...




Seithipunal
--> -->