சிறுவர்கள், இளைஞர்களை பாலியல் பலாத்காரம் செய்து மிரட்டி வந்த 22 வயது காமக்கொடூரன் கைது: மொபைலில் சிக்கிய 600 ஆபாச வீடியோக்கள்..!
Man arrested for raping boys and youth in Maharashtra and 600 pornographic videos found on mobile
மகாராஷ்டிரா மாநிலத்தில் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களை பாலியல் பலாத்காரம் செய்து மிரட்டி வந்த 22 வயது இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் நந்தூர்பார் மாவட்டம் ரைசிங்புரா பகுதியைச் சேர்ந்த சேத்தன் பிரகாஷ் கோலி (22) என்ற இளைஞர், சிறுவர்களுக்கு பணம் தருவதாக கூறி, ஆசை காட்டி அழைத்துச் சென்று அவர்களை பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். அதனைத் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தும் வந்துள்ளார்.
பின்னர் அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி 2022-ஆம் ஆண்டு முதல் 2026-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 06-ஆம் தேதி வரை தொடர்ந்து அவர்களை பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். ஒரு ரகசியத் தகவலின் அடிப்படையில் போலீசார் குற்றவாளியைப் பிடித்து அவரிடம் இருந்த செல்போனை சோதனையிட்டுள்ளனர்.

அதில் 600க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்களும் புகைப்படங்களும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
இது குறித்து மாவட்ட எஸ்பி அஸ்வினி சனப் கூறியதாவது; குறித்த இளைஞர் சிறுவர்களைப் பண ஆசை காட்டி வரவழைத்து குற்றச் செயலில் எட்டுப்பட்டுள்ளதால் அவரை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். அத்துடன், அவரது செல்போனை தடயவியல் ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும், 2022-ஆம் ஆண்டு முதல் அவர் இந்த அத்துமீறலில் ஈடுபட்டு வந்துள்ளதாக கூறியுள்ளார்.
மேலேயும், பாதிக்கப்பட்ட நபர்களை வீடியோக்கள் மூலம் அடையாளம் கண்டு, அவர்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்து சட்டப்பூர்வ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
English Summary
Man arrested for raping boys and youth in Maharashtra and 600 pornographic videos found on mobile