பாஜக மாநில நிர்வாகிகளுடன் பிரபல ரவுடி படப்பை குணா ரகசிய ஆலோசனை..!! - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரம் மாவட்டத்தை அடுத்த மதுரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி படப்பை குணா என்கிற குணாசேகரன் திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் ரியல் எஸ்டேட் அதிபர்களை மிரட்டுவது, கட்டப்பஞ்சாயத்து செய்வது, அடிதடி, சிறு குறு தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களை மிரட்டுவது உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இவர் மீது கொலை, கொள்ளை முயற்சி, ஆள் கடத்தல் என 48 வழக்குகள் நிலுவையில் உள்ளது.

இந்த வழக்குகளில் தன்னை காவல்துறையினர் கைது செய்து விடுவார்கள் என எண்ணிய படப்பை குணா சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார். இவர் கடந்த மாதம் ஜாமீனில் வெளியே வந்து நாள்தோறும் உத்திரமேரூர் நீதிமன்றத்தில் கையெழுத்திட்டு வருகிறார். இவருடைய மனைவி எல்லாம்மாள் காஞ்சிபுரம் பாஜக மாவட்ட பொறுப்பில் இருந்து வருகிறார். ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய கவுன்சிலர் ஆகவும் எல்லம்மாள் பதவி வகிக்கிறார்.

இந்த நிலையில் ஸ்ரீபெரும்புதூரில் தனியார் திருமண மண்டபத்தில் பாஜக கட்சியில் உறுப்பினர் சேர்க்கை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் பாஜக மாநில செயலாளர் வினோத் பி செல்வம் தலைமையில் நடைபெற்ற நிலையில் படப்பை குணா திடீரென தனது ஆதரவாளர்களுடன் கூட்டத்திற்கு வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. படப்பை குணாவின் வருகையை கண்ட பாஜகவினர் விசில் அடித்து கைதட்டி ஆரவாரமாக வரவேற்றனர். 

இதனைத் தொடர்ந்து பாஜகவின் மாநில மற்றும் மாவட்ட தலைவர்களுடன் படப்பை குணா சிறிது நேரம் ரகசிய ஆலோசனையில் ஈடுபட்டார். பின்னர் தனது ஆதரவாளருடன் தனியார் மண்டபத்தை விட்டு வெளியேறினார். ஏற்கனவே பல குற்றவாளிகள் பாஜகவில் தஞ்சம் அடைவதாக அரசியல் கட்சிகள் விமர்சனம் செய்து வரும் நிலையில் பாஜக கூட்டத்தில் படப்பை குணா கலந்துகொண்டு மாநில நிர்வாகிகளுடன் ரகசிய ஆலோசனை நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளின் புகலிடமாக பாஜக மாறி வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rowdy Padapai guna secret consultation with BJP state officials


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->