தமிழக வளர்ச்சிக்கு ‘ரெட் சிக்னல்’! கோவை–மதுரை மெட்ரோ ரத்துக்கு எதிராக கோவையில் வெடிக்கும் எதிர்ப்பு...!
Red signal Tamil Nadus development Protest erupts Coimbatore against cancellation CoimbatoreMadurai Metro
சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை முன்மாதிரியாக இயங்கி வரும் நிலையில், கோவை மற்றும் மதுரை நகரங்களுக்கும் மெட்ரோ ரெயில் திட்டங்கள் விரைவில் பச்சைக்கொடி பெறும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியிருந்தது. அந்த நகரங்களுக்கான விரிவான திட்ட அறிக்கைகளும் (DPR) சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.
ஆனால் அதிரடி திருப்பமாக, இந்த இரு நகரங்களுக்கும் மெட்ரோ ரெயில் அனுமதி வழங்குவதைக் மத்திய அரசு நிராகரித்துள்ளது. கோவை, மதுரை நகரங்களில் மக்கள் தொகை மெட்ரோ ரெயிலுக்குத் தேவையான அளவில் இல்லையென மத்திய அரசு காரணம் காட்டியுள்ளது.

இந்த முடிவு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிருப்தியை கிளப்பியுள்ளது.திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் இந்த முடிவை கடும் எதிர்ப்புடன் கண்டித்துள்ளன. தமிழ்நாட்டின் முக்கிய வளர்ச்சி முயற்சிகளைப் புறக்கணிக்கும் அணுகுமுறையாகவே இது கருதப்பட்டுள்ளது.இதன் எதிரொலியாக, கோவை செஞ்சிலுவை சங்கம் அருகில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சிகள் இணைந்து தீவிர ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஆர்ப்பாட்டத்தில் திமுக, காங்கிரஸ், விதிமுறைக்குழு கட்சிகள் உள்ளிட்ட பலரும் பெருமளவில் பங்கேற்றுள்ளனர்.மத்திய பா.ஜ.க அரசு தமிழகத்தின் முன்னேற்றத்தையே திட்டமிட்டு தடுக்கிறதே என்ற குற்றச்சாட்டு முழங்கியதால் கோவையில் அரசியல் சூடு உயரும் நிலை உருவாகியுள்ளது.
English Summary
Red signal Tamil Nadus development Protest erupts Coimbatore against cancellation CoimbatoreMadurai Metro