தமிழகத்தில் இன்று ஒரு வார்டில் மட்டும் மறுவாக்குப்பதிவு.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19ம் தேதி நடைபெற்று முடிந்தது. இதையடுத்து, கடந்த 22ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதனிடையே கடலூர் மாவட்டத்தில் கடலூர் மாநகராட்சி மற்றும் 6 நகராட்சிகள், 14 பேரூராட்சிகளுக்கான தேர்தல் நடந்தது. 

இதில் புவனகிரி பேரூராட்சியில் 18 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற்றது முடிந்தது. அன்று இரவு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணிக்கையை மையமான புவனகிரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து கடந்த 22ஆம் தேதி புவனகிரி பேரூராட்சியில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு எண்ணப்பட்டது. 

அப்போது, புவனகிரி பேரூராட்சி 4 வார்டில் உள்ள வாக்குச்சாவடியில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரம் திடீரென பழுது அடைந்து. பின்னர் டெல் நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் சரிபார்த்தும், அதனை சரி பார்க்க முடியவில்லை. இதனால் 4வது வார்டு வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது. 

இந்நிலையில், புவனகிரி பேரூராட்சி 4-ஆவது வார்டு திருவள்ளுவர் தெருவில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில்  இன்று மறு வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்குப்பதிவு முடிந்ததும், அதே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வைத்து வாக்கு எண்ணிக்கை தொடங்கி தேர்தல் முடிவுகள் உடனே அறிவிக்கப்பட உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

re polling for bhuvanagiri municipality 4th ward


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->