தொடரும் தைலாபுரம் தோட்டத்து மலர்கள்.! மண்டையை பிய்த்து கொள்ளும் நெட்டிசன்கள்.!
Ramadoss tweet about his garden flowers
சில தினங்களுக்கு முன்பு பாமக நிறுவனர் மருத்துவர்.ராமதாஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சீதை சிறைவைக்கப்பட்ட அசோகவனத்தில் இருந்த மலர் என்று தன்னுடைய தைலாபுரம் தோட்டத்தில் மலர்ந்துள்ள மலரின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார். தொடர்ச்சியாக சில பூக்களின் பெயர் மற்றும் புகைப்படத்தை வெளியிட்டு வருகின்றார்.
அந்த வரிசையில் இன்று நான்காவது பூ என்று இட்லி பூவை பற்றி டுவிட்டரில் தெரிவித்து இருக்கின்றார். அந்த பதிவில், "தைலாபுரம் தோட்டத்து மலர்கள்: 4. வெட்சிப்பூ. இதை இட்லிப்பூ என்றும் அழைப்பார்கள். ஆங்கிலத்தில் இதற்கு West Indian Jasmine என்று பெயர். இதன் அறிவியல் பெயர் Ixora ஆகும்" என்று அவர் தெரிவித்து இருக்கின்றார்.
இதனை வரவேற்கும் விதமாக அவருடைய தொண்டர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். சமீபத்தில் சீதை சிறைவைக்கப்பட்ட அசோகவனத்தில் இருந்த அசோகா மலரென்று ஒரு மலரின் புகைப்படத்தை டாக்டர் ராமதாஸ் வெளியிட்டிருந்தார். எனவே, நெட்டிசன்கள் பலரும் குழம்பிப்போய், "ஐயா என்னதான் சொல்ல வருகிறார்? தைலாபுரம் தோட்டம் அசோகவனம் என்கிறாரா?" என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இருப்பினும் இது போன்ற எதிர்மறை கருத்துக்களுக்கு பதிலளிக்காமல் தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வண்ணம் தோட்டத்தில் மலரும் மலர்களின் புகைப்படத்தை அவர் வெளியிட்டு வருகின்றார். இதனால், பல்வேறு தரப்பினரும் காரணம் புரியாமல் குழம்பி தவித்து வருகின்றனர்.
English Summary
Ramadoss tweet about his garden flowers