பாஜகவுக்கு எதிரான கருத்துக்கு., ஆதரவு தெரிவித்த ரஜினி!! - Seithipunal
Seithipunal


சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் சூர்யா மூன்று வயதிலேயே மூன்று மொழி கல்வி திணிக்கப்படுகிறது என்று சர்ச்சை பேச்சு அனைவராலும் பேசப்பட்ட ஒரு செய்தியாகும். இதில் பலர் எதிர்ப்புகளும் தெரிவித்துள்ளனர் பலர் வரவேற்புகளும் தெரிவித்துள்ளனர்.

சூர்யாவின் இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெருவாரியாக மாறி உள்ளது சூர்யாவின் பேச்சு குறித்து பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் கடுமையாக எதிர்த்து கேள்விகளை முன்வைத்தனர். சூர்யாவின் கருத்துக்கு ஆதரவாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், நடிகர் கமலஹாசன், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்திருந்தனர்.

இந்தநிலையில், இந்த நிலையில் சூர்யா நடிக்கும் காப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது, இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த், புதிய கல்விக் கொள்கை குறித்து சூர்யா பேசியது அவர் மனதில் இருந்த நெருப்பு என்றும் மாணவர்கள் படும் கஷ்டங்களை கண்ணெதிரே பார்த்தவர் அவர் மேலும் பல மாணவர்களின் கல்விக்கு உதவி செய்பவர் எனவும் குறிப்பிட்ட அவர் சூர்யாவின் கருத்துக்கு தான் ஆதரவு தருவதாக தெரிவித்தார்.

அதே நிகழ்ச்சியில் ரஜினிக்கு முன்னர் பேசிய வைரமுத்து புதிய கல்விக் கொள்கை குறித்து ரஜினி பேசியிருந்தால் பிரதமர் மோடிக்கு எட்டியிருக்கும் என தெரிவித்திருந்தார். வைரமுத்துவின் பேச்சுக்கு பதிலளித்த நடிகர் ரஜினிகாந்த் சூர்யா பேசியதே மோடிக்கு கேட்டு விட்டது என்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

rajni support surya


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->