ரஜினியின் அரசியல் அறிவிப்பு.. சைதை துரைசாமி, அகில இந்திய தனுஷ் நண்பர்கள் நற்பணி மன்றம் ஆதரவு.! - Seithipunal
Seithipunal


நடிகர் ரஜினிகாந்த் வரும் ஜனவரி மாதத்தில் கட்சி தொடங்கவுள்ளதாகவும், கட்சியின் துவக்க தேதியை டிசம்பர் 31 ஆம் தேதியன்று அறிவிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார். இதனால் அரசியல் வட்டாரத்தில் மாபெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், ரஜினி கட்சி தொடங்கி யாருக்கு ஆதரவு தெரிவிப்பார்? என்ற பேச்சுக்கள் எழுந்து வருகிறது. 

இந்நிலையில், ரஜினியின் அரசியல் வருகை அறிவிப்பு பல்வேறு தரப்பில் வரவேற்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை. துரைசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், " வேலப்பன் சாவடியில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர்சிலை திறப்பு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், என்னால் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் போல நல்லாட்சி, ஏழைகளுக்கான ஆட்சி, சாமானியர்களுக்கான ஆட்சி, நடுத்தர வர்க்க குடும்பத்தினருக்கான ஆட்சியை தர முடியும் என்பதை நம்பிக்கையுடன் உறுதிபட தெரிவித்து இருந்தார். 

நல்ல திறமையான ஆலோசகர்களையும், தொழில்நுட்பத்தையும் பயன்படுத்த அத்தகைய ஆட்சியை கொடுப்பேன் என்பதையும் சொல்லி இருந்தார். ஏழைகளுக்கான, சாமானிய மக்களுக்கான புரட்சித் தலைவர் ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் மலரச் செய்ய திரு.ரஜினிகாந்த் அவர்களை மனதார வரவேற்கிறேன் " என்று தெரிவித்துள்ளார்.

இதனைப்போன்று அகில இந்திய தலைமை தனுஷ் நண்பர்கள் நற்பணி மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில், " இனி ஒரு விதி செய்வோம்.. மாற்றம் என்பது தானே மாறுவது அல்ல., நாம் மாற்றுவது.. அமைப்போம் தலைவர் தலைமையில் மக்களாட்சி.. தமிழர்களுக்கான தமிழக மக்களுக்கான ஆட்சி " என்று அகில இந்திய தலைமை தனுஷ் நண்பர்கள் நற்பணி மன்ற தலைவர் சுப்பிரமணியம் சிவா மற்றும் செயலாளர் ராஜா தெரிவித்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rajinikanth Politics Announcement Wishes by Dhanush Fans Club and Chennai Ex Mayor Saidhai Duraisamy


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->