வேட்டையன் படத்தின் முக்கிய சர்ச்சை கட்சி நீக்கம் - அதிமுக முன்னாள் அமைச்சர் பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal



தூத்துக்குடியில் நடிகர் ரஜினியின் வேட்டையின் திரைப்படம் திரையிடப்பட்ட தியேட்டர் முன்பு ஆசிரியர்கள், பொதுமக்கள், மாணவர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வேட்டையின் படத்தில் தங்கள் பகுதியில் உள்ள அரசு பள்ளியை தவறாக சித்தரித்துள்ளதாக குற்றம் சாட்டி இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது.

கோவில்பட்டி திரையரங்கம் முன்பு குவிந்த போராட்டக்காரர்கள், சர்ச்சைக்குரிய அந்த காட்சியை நீக்கி விட்டு படத்தை திரையிட வேண்டும் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

இதனை அடுத்து போராட்டக்காரர்களிடம் போலீசார், இது குறித்து புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். இதனை ஏற்றுக்கொண்டு போராட்டத்தை கைவிட்டு போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

இதற்கு இடையே தனியார் செய்தி ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு, வேட்டையன் திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குவதாக தெரிவித்துள்ளனர்.

வேட்டையின் திரைப்படத்தில் கோவில்பட்டி அரசு பள்ளியை தவறாக சித்தரித்து காட்சிப்படுத்தியுள்ளனர். அந்த பள்ளி 100% தேர்ச்சி தரக்கூடிய ஒரு பள்ளி ஆகும்.

இந்த தவறான சித்தரிப்பு காரணமாக பள்ளி ஆசிரியர்களும், இந்த பகுதி மக்களும், மாணவர்களும் மிகுந்த வருத்தத்துக்கு அடைந்துள்ளனர். படத்தின் தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாகி சர்ச்சைக்குரிய அந்த காட்சியை நீக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பேட்டி அளித்துள்ளார்.

வேட்டையன் படத்தின் இயக்குனர் இயக்கிய ஜெய்பீம் படத்தின் கதை திருட்டு கதை, உண்மையை மறைத்து தமிழ் சமூகங்களை கொச்சைப்படுவதாக வழக்குகள் தொடரப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rajini Vettaiyan ADMK Kadambur Raju


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->