ரஜினியின் திட்டம் உறுதியானது.! வெளியாக போகும் அறிவிப்பு.! கிடைக்குமா அனுமதி.?! - Seithipunal
Seithipunal


ரஜினி மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிகளுடன் நடிகர் ரஜினிகாந்த் நாளை (நவம்பர் 30ந் தேதி) ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியான நிலையில், தற்போது அது உறுதியாகியுள்ளது.

ரஜினியின் அரசியல் வருகை குறித்து சமீபத்தில் வெளியான ஒரு அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த அறிக்கையில், "காய்ச்சல் ஏற்பட்டதாகவும், கொரோனா காலத்தில் மக்களை சந்திப்பதை தவிர்க்குமாறு, ரஜினிக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தி இருப்பதாக" தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த அறிக்கை குறித்து ரஜினி தெரிவிக்கையில், மக்களை சந்திப்பதை தவிர்க்குமாறு தனது பெயரில் வந்த அறிக்கை உண்மையல்ல, மருத்துவ தகவல்கள் மட்டுமே உண்மை என்று தெரிவித்தார்.

இந்நிலையில், சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் வரும் 30ந் தேதி காலை நடிகர் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்த உள்ளார் என்று தகவல் வெளியாகியது. இந்த கூட்டத்தில் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து ரஜினிகாந்த் இறுதி முடிவு எடுக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியது. 

இந்நிலையில், சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடிகர் ரஜினிகாந்த் ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் நடத்த உள்ள ஆலோசனை கூட்டத்துக்கான ஏற்பாடுகள் குறித்து, இன்று நடிகர் ரஜினிகாந்த், மாநில நிர்வாகி உள்ளிட்ட சிலருடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

ஆலோசனை கூட்டத்துக்கு கோடம்பாக்கம் காவல்துறையிடம் அனுமதி கேட்டு ரஜினிகாந்த் தரப்பில் அளிக்கப்பட்ட மனு தற்போது வரை அனுமதி கிடைக்காத நிலையில், மாநில நிர்வாகி உள்ளிட்ட சிலருடன் ரஜினி இன்று ஆலோசனை நடத்தி வருகிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rajini political entry nov 29


கருத்துக் கணிப்பு

சசிகலா விடுதலைக்கு பின் அதிமுக - அமமுக..,Advertisement

கருத்துக் கணிப்பு

சசிகலா விடுதலைக்கு பின் அதிமுக - அமமுக..,
Seithipunal