அமைச்சரை பொறுப்பில் இருந்து நீக்கி, ஓபிஎஸ் இபிஎஸ் அதிரடி!  - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்ட கழக செயலாளராக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் பதவி வகித்து வரும் கே டி ராஜேந்திர பாலாஜி அப்பதவியிலிருந்து இன்று முதல் விடுவிக்கப்படுகிறார் என அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம்,  இணை ஒருங்கிணைப்பாளர் முதலமைச்சர் எடப்பாடி கே பழனிச்சாமி அறிவித்துள்ளனர். 

ஒருங்கிணைந்த விருதுநகர் மாவட்டத்திற்கு கழகச் செயலாளராகவும் பால்வளத் துறை அமைச்சராகவும் இருந்து வருபவர் கே டி ராஜேந்திர பாலாஜி. இவர் மீது அண்மைக்காலமாக பாஜக விற்கு ஆதரவாக செயல்படுகிறார் என குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது. அதேபோல அண்மையில் ஒரு பத்திரிக்கையாளர் ஒருவர் தாக்கப்பட்டதில் இவரின் பெயரானது அதிக அளவில் பேசப்பட்டது. 

இந்த நிலையில் அவர் கட்சியிலிருந்து கட்சிப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் இவர் விருதுநகர் மாவட்டத்தில் அமமுகவில் கோலோச்சிக் கொண்டிருந்த மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட பல நிர்வாகிகளை அதிமுகவிற்கு அண்மையில்தான் கொண்டு வந்து சேர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவித்து விட்டு வேறு ஏதேனும் உயர்ந்த பதவியை கொடுக்கப் போகிறார்களா? அல்லது வேறு யாரையேனும் புதியதாக பதவிக்கு கொண்டு வருவதற்காக இவரை நீக்கியிருக்கிறார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rajendra balaji remove from party post


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->