தவெக கூட்டணி வாய்ப்புகள் கையில் இருந்து வழுக்கியதா...? - ஆதவ் அர்ஜுனா மீது விஜய் அதிருப்தி...!
Did chances tvk alliance slip away Vijay upset Adhav Arjuna
தவெக (தமிழக வெற்றிக் கழகம்) கூட்டணியை பலப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் ஆரம்பத்திலேயே “ஆட்சியில் பங்கு” என்ற அரசியல் அஸ்திரத்தை தலைவர் விஜய் வீசினார். இந்த உத்தி பல கட்சிகளில் ஆர்வத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக காங்கிரஸ், விஜய்யை ஒரு அரசியல் கார்டாக பயன்படுத்தி திமுக மீது அழுத்தம் கொடுக்க முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த கூட்டணிக்கு வரக்கூடிய கட்சிகளை அணுகும் பொறுப்பை தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனாவிடம் விஜய் ஒப்படைத்தார். மற்ற கட்சிகளில் உள்ள முக்கிய தலைவர்களை தவெக பக்கம் இழுக்கும் பணியும் அவரிடமே இருந்தது.
அதன் விளைவாக செங்கோட்டையன் போன்ற சிலர் தவெக அணிக்கு வந்தனர்.ஆனால் கூட்டணிக்கான பேச்சுவார்த்தைகளை உறுதியாக முன்னெடுக்காததால் பல வாய்ப்புகள் தவறிவிட்டதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
டிடிவி தினகரன், பிரேமலதா, மேலும் ஓபிஎஸ் அணியிலுள்ள சிலரும் தவெக கூட்டணியை முதன்மை விருப்பமாகக் கருதியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் தெளிவான அழைப்பு அல்லது பேச்சுவார்த்தை இல்லாததால் அவர்கள் திமுக பக்கம் நகர்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடைசி கட்டமாக காங்கிரஸ் மீது விஜய் நம்பிக்கை வைத்திருந்தார். ஆனால் அங்கும் பேச்சுவார்த்தை சரியாக அமையாததால் அந்த வாய்ப்பும் தவறிவிட்டது. இதனால் கூட்டணிக்காக காத்திருந்த பல கட்சிகள் திமுக அணியில் இணைந்துவிட்டன.
இந்த நிலையில், “நமக்கிருந்த கூட்டணி வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தவில்லை” என ஆதவ் அர்ஜுனா மீது விஜய் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதாக தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
English Summary
Did chances tvk alliance slip away Vijay upset Adhav Arjuna