ஒரே தேசம், ஒரே தேர்தல்! பாரதத்தின் மீதான தாக்குதல்! ராகுல் காந்தி ட்விட்! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் நாடாளுமன்ற பொது தேர்தலுடன் சட்டமன்ற பொது தேர்தல் நடத்த ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற கொள்கையின் அடிப்படையில் சட்ட மசோதாவை தாக்கல் செய்ய வரும் செப்டம்பர் 18ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடர் கூடும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

அதேபோன்று ஒரே நாடு ஒரே தேர்தலை நடைமுறைப்படுத்தும் வகையில் ஆய்வு மேற்கொண்டு அது தொடர்பான அறிக்கையை கூடிய விரைவில் தாக்கல் செய்யுமாறு முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான எட்டு பேர் கொண்ட குழுவை நேற்று மத்திய அரசு அறிவித்தது.

மத்திய அரசின் இத்தகைய முடிவுக்கு அனைத்து எதிர்கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதே வேளையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. மேலும் காங்கிரஸ் கூட்டணி உள்ள ஒரு சில கட்சிகளும் இதற்கு ஆதரவு தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் "இந்தியா, அதாவது பாரதம் மாநிலங்களின் ஒன்றியம். ‘ஒரே தேசம், ஒரே தேர்தல்’ என்ற எண்ணம் யூனியன் மற்றும் அதன் அனைத்து மாநிலங்கள் மீதான தாக்குதலாகும்" என தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

RahulGandhi opined one nation one election is an attack on Bharat


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->