ராகுல் மாஸ்டர் பிளான்! பீகாரை எதிர்நோக்கும் திமுக! 100க்கு மேல சீட்டு 4 அமைச்சர் பதவி கேட்டு காங்கிரஸ் அடம்? அதிர்ச்சியில் திமுக!
Rahul master plan DMK is facing the car Congress is asking for 4 ministerial posts with more than 100 seats DMK in shock
தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பு சூழல் உருவாகி வருகிறது. இன்னும் ஆறு மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற இருக்க, திமுக – காங்கிரஸ் கூட்டணியில் புதிய பதட்டம் வெடிக்கப் போகிறது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
முதல்வர் எம்.கே. ஸ்டாலினும் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் நண்பர்களைப் போலவே நெருக்கமாக பழகும் உறவு கொண்டவர்கள். ராகுல் காந்தி கடந்தமுறை தமிழகத்துக்கு வந்தபோது ஸ்டாலினுக்குப் பிடித்த ஸ்வீட்டை தனியாக வாங்கி வழங்கிய சம்பவம் ரசிகர்களிடையே பேசப்பட்டதுதான்.
ஆனால், அரசியல் உறவில் தற்போது சிறிய பிளவு உருவாகியிருக்கிறது. காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து “ஆட்சியில் பங்கு வேண்டும்” என்ற கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல், வரவிருக்கும் 2026 சட்டசபைத் தேர்தலில் 117 தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்றும், 4 அமைச்சரவைப் பதவிகளும் வேண்டுமெனக் கோரிக்கை வைத்துள்ளனர்.
234 தொகுதிகளில் பாதி தொகுதி என்ற அளவில் காங்கிரஸ் கோரிக்கை வைத்திருப்பது, திமுக கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை பயன்படுத்தி, எதிர்க்கட்சியான எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக, “திமுக கூட்டணி சிதறப் போகிறது” என அரசியல் அசைவில் இறங்கியுள்ளதாக தெரிகிறது.
இந்தச் சூழ்நிலையில், காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த்,“ஆட்சியில் பங்கு வேண்டும் என்பது காங்கிரஸ் கட்சியின் பொதுவான விருப்பம். நாம் திமுக கூட்டணியில் தொடர விரும்புகிறோம், ஆனால் அதற்கான முடிவை தலைமையே எடுக்கும்,”
என்று தெரிவித்துள்ளார்.
இதேவேளை, டெல்லி மேலிடம் இந்த கோரிக்கையில் உறுதியாக இருப்பதாகவும், “கூட்டணி தொடர வேண்டுமானால் 4 அமைச்சர் பதவியும், 117 சீடுகளும் வேண்டும்” என்ற நிபந்தனைக்கு இணங்கவில்லை என்றால், புதிய முடிவை எடுப்போம் எனக் காங்கிரஸ் மேலிடம் சிந்தித்துவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையடுத்து, ராகுல் காந்தி அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் தமிழ்நாட்டில் ஒரு பிரம்மாண்ட மாநாட்டை நடத்தத் திட்டமிட்டுள்ளார். அந்த மாநாட்டிற்குப் பிறகு கூட்டணியில் பெரிய மாற்றங்கள் நிகழும் வாய்ப்பு அதிகம் என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
இதேநேரத்தில், தற்போது நடைபெறும் பீகார் சட்டசபைத் தேர்தல் முடிவுகளை காத்திருக்கும் திமுக, அந்த முடிவுகள் அடிப்படையில் காங்கிரஸின் கோரிக்கைக்கு பதிலளிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒரு வேளை பீகாரில் காங்கிரஸ் கட்சி தோல்வியைச் சந்தித்தால், தமிழகத்தில் அவர்களின் பேசும் வலிமையும் குறைந்து விடலாம் என்ற அரசியல் கணிப்பும் வெளிப்படுகிறது.
ஆனால் பீகாரில் காங்கிரஸ் சிறப்பாக செயல்பட்டால், ஜனவரியில் ராகுல் காந்தியின் மாநாட்டுக்குப் பிறகு கூட்டணியில் புதிய சமநிலை அமையலாம் என்றும் கூறப்படுகிறது.
2025 ஜனவரி – பிப்ரவரி மாதங்கள் தமிழ்நாட்டு அரசியலுக்கு திருப்புமுனையாக மாறப்போகிறது.திமுக – காங்கிரஸ் கூட்டணி தொடருமா? அல்லது புதிய கூட்டணி உருவாகுமா?அது எல்லாம் பீகார் தேர்தல் முடிவில் தான் முடிவடையப் போகிறது என்று அரசியல் வட்டாரங்கள் உறுதியாக கூறுகின்றன.
English Summary
Rahul master plan DMK is facing the car Congress is asking for 4 ministerial posts with more than 100 seats DMK in shock