ராகுல் காந்தியின் நடைபயணம் திடீர் நிறுத்தம்.. இன்று டெல்லி பயணம்.. காரணம் என்ன.? - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் கட்சியின் முக்கிய ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ராகுல்காந்தி பாதயாத்திரையை ஒருநாள் நிறுத்திவிட்டு இன்று (செப்டம்பர் 23) டெல்லிக்கு செல்கிறார்.

கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை பாதயாத்திரையை கடந்த 7-ந்தேதி காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி தொடங்கினார். நேற்று 15-வது நாளாக கேரள மாநிலத்தில் பாதயாத்திரை சென்றார்.

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் அடுத்த மாதம் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா தலைவர் பதவி தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக ராகுல் காந்தியுடன் பாதயாத்திரை நடத்தி வரும் கே.சி. வேணுகோபால் எம்.பி.யை டெல்லிக்கு அழைத்ததாக கூறப்படுகிறது.


இதையடுத்து அவர் 2 நாட்களுக்கு முன்பு அவசரமாக கொச்சியில் இருந்து டெல்லிக்கு விமானம் மூலம் புறப்பட்டு சென்றார். இதனிடையே சிகிச்சைக்கு பின் நாடு திரும்பிய சோனியா காந்தியை பார்ப்பதற்காகவும், கட்சியின் முக்கிய ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ளவும் ராகுல் காந்தி இன்று (செப்டம்பர் 23 ம் தேதி) நடைபயணத்தை ஒருநாள் நிறுத்திவிட்டு டெல்லி செல்கிறார். 

அங்கு கூட்டத்தில் கலந்து கொண்ட பின்பு மீண்டும் கேரளாவுக்கு வருவார். மேலும், 24-ந் தேதி காலை 7 மணிக்கு வழக்கம்போல் ராகுல் காந்தி சாலக்குடியில் இருந்து பாதயாத்திரையை தொடங்குகிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rahul Gandhi travelling to Delhi for Congress leader election


கருத்துக் கணிப்பு

மக்கள் வரிப்பணத்தை எடுத்து கொடுத்துவிட்டு, மக்களையே ஓசில போறிங்க என்று அசிங்கப்படுத்தும் திமுக அமைச்சரின் பேச்சு?Advertisement

கருத்துக் கணிப்பு

மக்கள் வரிப்பணத்தை எடுத்து கொடுத்துவிட்டு, மக்களையே ஓசில போறிங்க என்று அசிங்கப்படுத்தும் திமுக அமைச்சரின் பேச்சு?
Seithipunal