தவறு செய்தது பிரதமர் மோடிதான்: ஆப்ரேஷன் சிந்தூர் தொடங்கிய 30 நிமிடங்களிலேயே இந்தியா சரணடைந்துவிட்டது: ஒன்றிய அரசை குற்றம் சுமத்தியுள்ள ராகுல் காந்தி..!
Rahul Gandhi accuses the Union government of surrendering within 30 minutes of the start of Operation Sindoor
பஹல்காம் தாக்குதலில் இறந்தவர்களை தனது உறவினர்களை இழந்தது போல உணருவதாகவும், அங்கு அப்பாவி மக்கள் சிறிதும் இரக்கமின்றி கொடூரமாக கொல்லப்பட்டுள்ளதாகவும், அந்த மக்களுக்கு நேர்ந்த கொடூரத்தை தனக்கு நேர்ந்ததாக உணருவதாக மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் பேசியதாவது: பஹல்காமில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தேன். பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு எதிர்க்கட்சிகள் பொறுப்புணர்வுடனும், ஆபரேஷன் சிந்தூர் விவகாரத்தில் ஒற்றுமையாக செயல்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், அனைத்து எதிர்க்கட்சிகளும் பாகிஸ்தானுக்கு கடும் கண்டனம் தெரிவித்ததாக பேசியுள்ளார்.

மேலேயும், பஹல்காமில் பச்சைப் படுகொலையை அரங்கேற்றியது பாகிஸ்தான் அரசுதான். ஆபரேஷன் சிந்தூர் தொடங்குவதற்கு முன்பே அனைத்து எதிர்க்கட்சிகளும் அரசுக்கு முழு ஆதரவு அளித்தன என்றும் தெரிவித்துள்ளார். மேலும், ஒன்றிய அரசின் பின்னால் எதிர்க்கட்சிகள் மலைபோல் துணை நின்றதாகவும், ஒன்றிய அரசுக்கு துணை நிற்பது என இந்தியா கூட்டணி கட்சிகள் கூடி முடிவு செய்தோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நமது பாதுகாப்புப் படை வீரர்கள் நாட்டை காப்பதில் புலி போல் செயல்பட்டார்கள் என்றும், பாதுகாப்புப் படையினருக்கு முழு சுதந்திரம் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். அத்துடன், வங்கதேசப் போரின் அமெரிக்காவின் 07-வது கப்பற்படை வந்தது; ஆனால் அதை உறுதியுடன் எதிர்கொண்டார் இந்திரா காந்தி. 1971 போரையும் ஆபரேஷன் சிந்தூரையும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்பிட்டு பேசினார் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால் 1971 போரின் போது பிரதமர் இந்திரா காந்தி தலைமையில் வலுவான அரசியல் இருந்தது. அப்போது எந்த வல்லரசு நாட்டின் ஆதிக்கத்துக்கும் அடிபணியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். 1971 பேரின்போது பாதுகாப்புப் படையினருக்கு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி முழு சுதந்திரம் அளித்திருந்தார். இந்தியாவின் வலுவான நடவடிக்கையால்தான் ஒரு லட்சம் பாகிஸ்தான் வீரர்கள் 1971 சரணடைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், ஒரு சண்டை நடக்கும்போது தொடர்ந்து நான் தாக்க மாட்டேன் என்று சொல்வது எப்படி சரியாக இருக்கும்?. ஆப்ரேஷன் சிந்தூருக்கு முன்பாகவே பாகிஸ்தானுக்கு தகவல் தெரிவித்துவிட்டது மோடி அரசு எட்ன்றும் குற்றம் சாட்டியுள்ளார். அத்துடன், ஆப்ரேஷன் சிந்தூர் தொடங்கிய 30 நிமிடங்களிலேயே இந்தியா சரணடைந்துவிட்டதாகவும், பாகிஸ்தானின் எந்த ராணுவ நிலைகளையும் தாக்க மாட்டோம் என இந்திய அரசு உறுதி அளித்தது. ஆனால், பாகிஸ்தானுக்கு எதிராக உறுதியான நிலைப்பாட்டை எடுக்க மோடி தவறிவிட்டார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது என பிரதமர் மோடியே உத்தரவிட்டது எப்படி சரியாகும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். பாகிஸ்தானின் ராணுவ நிலைகளை தாக்க வேண்டாம் என இந்திய படைகளுக்கு உத்தரவிட்டதை ராஜ்நாத் சிங்கே ஒப்புக் கொள்கிறார். நமது விமானப் படையின் கைகளை கட்டிவிட்டீர்கள் என்று குற்றம் சுமத்தியுள்ளார்.
அரசியல் தலைமையின் உத்தரவு காரணமாகவே பாகிஸ்தான் ராணுவ தளங்களை தாக்கவில்லை என ராணுவ அதிகாரியே கூறுகிறார். இந்திய ராணுவம் எந்தத் தவறும் செய்யவில்லை; தவறு செய்தது பிரதமர் மோடிதான். என்று கடுமையாக சாடியுள்ளார். பாகிஸ்தான் ராணுவ தளங்களை தாக்கக் கூடாது என்று கூறியதால்தான் இந்தியா விமானங்களை இழக்க நேரிட்டது என்றும் ஒன்றிய அரசின் தவறால் தான் விமானங்களை இழந்தோம் என ராகுல் காந்தி கடுமையாக மோடி மீது குற்றம் சுமத்தியுள்ளார்.
English Summary
Rahul Gandhi accuses the Union government of surrendering within 30 minutes of the start of Operation Sindoor