துச்சேரி மாநில தி.மு.க. சட்டமன்ற கட்சித் தலைவர், கொறடா அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


புதுச்சேரி மாநில தி.மு.க. சட்டமன்ற கட்சி நிர்வாகிகள் நியமனம் செய்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அந்த அறிவிப்பில், "புதுச்சேரி மாநில தேர்தல் பொறுப்பாளர், கழக கொள்கைப் பரப்புச் செயலாளர் திரு. எஸ்.ஜெகத்ரட்சகன், எம்.பி., அவர்கள் தலைமையில், புதுச்சேரி மாநிலக் கழக அமைப்பாளர் திரு.இரா.சிவா அவர்கள் முன்னிலையில் நடைபெற்று முடிந்த புதுச்சேரி மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற கழக சட்டமன்ற உறுப்பினர்களுடன் கலந்து பேசி, புதுச்சேரி மாநில தி.மு.க. சட்டமன்ற கட்சி நிர்வாகிகள் பின்வருமாறு நியமிப்பதென முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, திரு. ஏ.எம்.எச்.நாஜிம், எம்.எல்.ஏ., புதுச்சேரி மாநில தி.மு.க. சட்டமன்ற கட்சித் தலைவராகவும்; 
துணைத் தலைவராக ஆர்.ஆர்.செந்தில்குமார், எம்.எல்.ஏ., அவர்களும்; 
கொறடாவாக ஏ.கே.ரமேஷ் (எ) செந்தில், எம்.எல்.ஏ., அவர்களும்; 
செயலாளராக வி.கார்த்திகேயன், எம்.எல்.ஏ., அவர்களும்; 
பொருளாளராக விக்னேஷ் கண்ணன், எம்.எல்.ஏ., அவர்களும் நியமிக்கப்படுகிறார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

puducherry assembly dmk leader


கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..


செய்திகள்



Seithipunal
--> -->