பெருமிதம்! பயங்கரவாதிகளின் இருப்பிடங்களுக்கே சென்று அவர்களை வீரத்துடன் அழித்துள்ளோம்!!!-மோடி
Proud We have gone terrorists hideouts and destroyed them bravely Modi
இன்று பாராளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குகிறது. இந்தக் கூட்டத்தொடரானது, ஆகஸ்டு 21-ந் தேதி வரை ஒரு மாத காலத்துக்கு நடக்கிறது.இந்த நிலையில் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கவுள்ள நிலையில் பிரதமர் மோடி நிருபர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது," பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் மிகவும் முக்கியமான ஒன்று. ஆக்சியம் 4 திட்டத்தின்கீழ் விண்வெளிக்கு சென்று திரும்பிய சுபான்ஷு சுக்லாவுக்கு பாராட்டு.
விண்வெளித் துறையில் இந்தியா புதிய வரலாறு படைத்துள்ளது. ஆபரேஷன் சிந்தூரில் இந்தியாவின் ராணுவ பலத்தை உலக நாடுகள் கண்டு வியந்தன. பாகிஸ்தானின் தீவிரவாத கட்டமைப்பை மண்ணுக்கடியில் புதைத்து விட்டோம்.
பயங்கரவாதிகளின் இருப்பிடங்களுக்கே சென்று அவர்களை வீரத்துடன் அழித்துள்ளோம். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் 100% இலக்குகள் நிறைவேற்றப்பட்டன.
இந்திய ராணுவத்தின் வீரத்தை உலகிற்கு பறைசாற்றும் விதமாக ஆபரேஷன் சிந்தூர் அமைந்தது. பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் புதிய தொடக்கங்களுக்கான கூட்டத்தொடர்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Proud We have gone terrorists hideouts and destroyed them bravely Modi