திராவிட மாடல் அரசின் சாதனை: கடந்த 04 ஆண்டில் மகளிருக்கு ரூ.1.21 லட்சம் கோடி கடனுதவி: மகளிர் மேம்பாட்டு நிறுவனம் பெருமிதம்..!
Womens Development Corporation has set a record by providing the most loans to women in the last 4 years under the Dravidian model regime
பெண்களின் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்காக தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் என்ற ஒரு தனி நிறுவனத்தை தொடங்கியதன் மூலம் தமிழ்நாடு அரசு ஒரு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்கள், மகளிர் சமூக, பொருளாதார மேம்பாடு அடைந்திட வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையுடன், 1989-ஆம் ஆண்டு தர்மபுரி மாவட்டத்தில் சுய உதவிக் குழு இயக்கம் என்ற இயக்கத்தை தொடங்கி வைத்தார்.
அதன் வழியாக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில், துணை முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் பல்வேறு சாதனைகளைப் படைத்த வருகிறது. குறிப்பாக சுய உதவிக் குழுக்களின் பொருளாதாரத் தேவையைக் கருத்தில் கொண்டு, அவைகளின் தடையற்ற செயல்பாடுகளுக்காக வங்கிக் கடன் இணைப்புகள் வழங்கப்படுகின்றன.

அந்தவகையில், திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்ற
2021-2022-ஆம் நிதி ஆண்டில் 4,08,740 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.21,392.52 கோடி,
2022-2023-ஆம் நிதி ஆண்டில் 4,49,209 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.25,642.01 கோடி,
2023-2024-ஆம் நிதி ஆண்டில் 4,79,350 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 30,074.76 கோடி,
2024-2025-ஆம் நிதி ஆண்டில் 4,84,659 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 35,189.87 கோடி வழங்கி சாதனை படைக்கப்பட்டுள்ளது.
2025-2026-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், சுய உதவிக் குழு மகளிருக்கு 37 ஆயிரம் கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்பு வழங்க, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, 18.07.2025 வரை 1,04,538 சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 13,58,994 உறுப்பினர்களுக்கு 9,113.24 கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
திமுக அரசு பொறுப்பேற்ற நான்காண்டுகளில் 19,26,496 சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 02 கோடியே 50 லட்சத்து 44 ஆயிரத்து 448 சுய உதவிக் குழு மகளிருக்கு 1,21,415.40 கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்பு வழங்கி சாதனை படைத்து, சுய உதவிக் குழுக்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து வருகிறது.
English Summary
Womens Development Corporation has set a record by providing the most loans to women in the last 4 years under the Dravidian model regime